ஊரில் ஒருவருக்கு கல்யாணம் முடிந்தால் அனைவரும் வாழ்த்து வழக்கம். ஆனால் இவர்களின் திருமணத்தை பார்த்து ஊரே வியந்தது.  தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை துவங்கிய  விஜே மஹாலட்சுமி, தற்போது முன்னணி  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்  பிரபலமான நாடங்களில் நடித்து வருகிறார். செல்லமே, முந்தானை முடிச்சு, வாணி ராணி, அவள் என பல சீரியல்களில் அவர் நடித்திருந்தார்.


அனில் என்பவரை திருமணம் செய்தார். பின்பு  சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். கடந்த சில காலங்களாக முருங்கைக்காய் சிப்ஸ் பட தயாரிப்பாளர் ரவிந்திரனும் மஹாலட்சுமியும் காதலித்து வந்தனர். இதற்கு இடையில் மஹா சக நடிகர் ஈஸ்வரனுடன் தொடர்பில் உள்ளார் என ஜெய ஸ்ரீ பேசி பெரும் கலவரத்தை எழுப்பியிருந்தார். தற்போது வனிதாவிற்கு எதிராக குரல் கொடுத்த யுடியூப் சென்சேஷன் ரவிசந்திரனை திருமணம் செய்து கொண்டார். காதலை கைவிடாமல், காதலனின் கரம் பிடித்தார் மஹா என்றுதான் சொல்ல வேண்டும்.







இவர்களின் திருமணம் அனைத்து மீடியாக்களிலும் பேசு பொருளாக மாறியது. பணம் பத்தும் செய்யும் என பலரும் அவர்களின் பதிவுகளுக்கு கமண்ட் செய்தனர்.நேர்காணல் ஒன்றில், நீங்கள் பணத்திற்காகதான்  இவரை திருமணம் செய்துள்ளீர்கள் என பலரும் கூறி  வருகின்றனர் என கேள்வி கேட்க, 
அதற்கு பதிலாக ரவிசந்திரன் “ பணத்திற்காக  திருமணம் செய்ய வேண்டும் என்றால், என்னை விட பணக்காரர்கள் உள்ளனர், பணம் வைத்துள்ள அழகானவர்களும் உள்ளனர். ஆனால் என் மீது உள்ள உண்மை காதலால்தான் என்னை இவர் திருமணம் செய்தார்”  என்று பதிலளித்தார்.


 







நேற்று ஒரு அழகான வீட்டில் அமர்ந்த படி போஸ் கொடுத்த போட்டோவை மஹா பதிவிட்டிருந்தார்.அந்த போஸ்ட்டில், காதல் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும்  என்று அவசியமில்லை, உண்மையாக இருந்தால் போதும்.. என்று கேப்ஷனோடு ஷேர் செய்திருந்தார்.