அந்தமான் நிகோபார் தீவுகள்:


அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும்.இந்திய பெருங்கடலில் இந்த தீவானது அமைந்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவு  சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும் . 


அந்தமான் நிக்கோபார் தீவுக்கும் நமது சுதந்திரத்திற்கும் மிக முக்கிய தொடர்பு உண்டு. நமது சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சிறை வைப்பதற்காக அந்தமான் நிக்கோபார் தீவுகளிலா சிறையறைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . பல பிரம்மிக்க வைக்கும் வரலாறு கொண்ட இந்த சிறிய தீவு தற்போது சுற்றுலா தலமாக உள்ளது. இதனைத் தவிர இங்கு சுற்றிப் பார்க்க நிறைய இடங்களும் உள்ளது. அந்தமான் ,நிக்கோபர் பகுதி இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இந்த இடத்தில் அந்தமான் கடல்களும் இந்திய பெருங்கடலும் இணைகின்றன. மேலும் இந்த தீவுகளில் அழகிய எண்ணிலடங்காத கடற்கரைகள் உள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவில்  பவளப்பாறைகள், தென்னந்தோப்புகள், வெள்ளை மணல் மற்றும் நீல கடல்  ,இங்குள்ள கடற்கரைகள் அமைதியான நமக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய அதிர்வுகளை கொண்டுள்ளது. 


நாம் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு சுற்றுலா  சென்றால் நமது நாட்களை  கழிப்பதற்கு சிறந்த ஒரு சில கடற்கரைகளை பார்ப்போம்:


○கோர்பின் கோவ் கடற்கரை
○ராதாநகர் கடற்கரை
○பரத்பூர் கடற்கரை
○கலிபூர் கடற்கரை
○ஆம் குஞ்ச் கடற்கரை


இந்த கடற்கரையில் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.


கோர்பின் கோவ் கடற்கரை:


அந்தமானில்  உள்ள மிக கவர்ச்சியான கடற்கரை என்றால் கோர்பின் கோவ் கடற்கரையாகும். இந்தக் கடற்கரையானது நாம் ஓய்வெடுக்கவும் நிதானம் அடையவும் மற்றும் நீர் விளையாட்டுக்கள் செய்யவும் ஏற்ற கடற்கரையாக உள்ளது. சாகச பிரியர்களுக்கு இது சிறந்த இடமாக நிச்சயமாக இருக்கும்.


ராதாநகர் கடற்கரை:


இந்த கடற்கரையானது போட்டோஜெனிக் கடற்கரை ஹேவ்லாக் தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இதுவும் ஒரு சிறந்த கடற்கரையாக பார்க்கப்படுகிறது. இங்கு பெரும்பாலும் மக்கள் காலையில் சூரிய உதயத்தை பார்க்கவும் அதனை படம் பிடிக்கவும் அதிகளவு வருகின்றனர்.வெள்ளை மணல், டர்க்கைஸ் நீர் மற்றும் பனை தாவரங்கள் பார்வையாளர்களுக்கு மன நிம்மதியை கொடுக்கிறது.


பரத்பூர் கடற்கரை:


இந்த பரத்பூர் கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு  தெளிவான வானம் மற்றும் கடலின் சிறந்த காட்சியை வழங்குகிறது.நாம்
நீந்த விரும்பினால் பரத்பூர் கடற்கரை சரியான இடமாகும். இது அழகான பவளப்பாறைகளை கொண்டுள்ளது. மேலும் நாம் கடலில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை காண கண்ணாடி அடி படகிலும் செல்லலாம்.


கலிபூர் கடற்கரை:


வடக்கு அந்தமானின் மிகப்பெரிய நகரமான திக்லிபூரின் மிகவும் பிரபலமான கடற்கரை கலிபூர் ஆகும். கடற்கரை ஒருபுறம் கடலையும் மறுபுறம் அழகான சேடில் சிகரத்தையும் வழங்குகிறது.இந்த  கடற்கரையின் சிறந்த அம்சம் என்னவென்றால், அழகான சிறிய ஆமைகள் அவற்றின் முட்டைகளிலிருந்து குஞ்சு பொரித்து கடலுக்குச் செல்வதைக் காணலாம்.இவைகள் நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.


ஆம் குஞ்ச் கடற்கரை:


ரங்கத்தில் அமைந்துள்ள ஆம் குஞ்ச் கடற்கரை ஒரு பிரபலமான கடற்கரையாகும். இது உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் அடிக்கடி பார்வையிடப்படுகிறது . முழு நேரமும் இந்த கடற்கரையானது மிகவும் கலகலப்பாக இருக்கும். இங்கு குறைந்த அலைகளின் போது ஆமைகளை மிகவும் அருகில் காணமுடியும். இங்கு குறைவான அலை இயக்கம் காணப்படுவதால் நாம் நீந்துவதற்கு ஏற்ற இடமாக இது உள்ளது.


நீங்கள் அந்தமான் சென்றால் இந்த முக்கியமான இடங்களுக்குச் சென்று அவற்றின் அழகினை கண்டுகளிக்கலாம்