நடிகை தமன்னா தனது ஒப்பந்த விதிமுறைப்படி படப்படிப்பில் கலந்து கொள்ளாத காரணத்தினால் தங்களுக்கு 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் செஃப் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி “மாஸ்டர் செஃப்”.இந்த நிகழ்ச்சியானது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிவருகிறது.
தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதேபோல் தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கினார். தெலுங்கில் இந்த நிகழ்ச்சியின் முகமாக தமன்னா விளங்கி வந்தார். ஆனால் திடீரென சில நாள்களுக்கு முன்பு தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது, அவரின் ரசிகர்கள் இடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தமன்னா ஒதுக்கிய கால்ஷீட்டுக்குள் நிகழ்ச்சியின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவில்லை. அதனால் தமன்னாவால் மற்ற எபிசோடுகளுக்கு வரமுடியவில்லை. எனவேதான் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் என கூறப்பட்டது.
மேலும்,மாஸ்டர் செஃப்' தெலுங்கு பதிப்புக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதாலும், தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமன்னாவின் குற்றச்சாட்டுகளை தயாரிப்பு நிறுவனம் முற்றிலுமாக மறுத்துவிட்டது. தமன்னாவின் புகாருக்கு எதிராக அந்நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், உண்மைக்கு மாறான தகவலை தமன்னா கூறி வருகிறார். மாஸ்டர் செப் தெலுங்கு தொகுப்பு படிப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை தமன்னாவிடம் 18 நாட்களுக்கு ரூ.2 கோடி சம்பளத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அவர் உறுதி அளித்தற்கு மாறாக 16 நாட்கள் மட்டுமே பங்கேற்றார். மேலும், படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும், ஒப்பந்த விதிமுறைப்படி தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை சம்பளம் கொடுத்து விட்டோம். இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையொட்டி, தமன்னாவுக்கு பதிலாக தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தொகுப்பாளருமான அனுசுயா தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் நடந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ‛பொறுக்கித் தனம் அது....’ நீர் வீழ்ச்சியில் தாய் சேயை காப்பாற்றிவரிடம் போனில் பேசிய கமல்!