தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் நடிகர் வெற்றி மாறன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைதும் சூப்பர் டூப்பர் ஹிட். சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசால் வழங்கப்பட்ட தேசிய விருதையும் வாங்கி கெத்து காட்டினார் வெற்றிமாறன்.  இந்நிலையில் விகடனுக்கு பேட்டியளித்த இயக்குநர் வெற்றிமாறன் தான் பணியாற்றும் படங்கள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். அவரது திட்டத்தில் விஜய், கமல் உள்ளிட்டோரும் இணைந்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.  அதன்படி, சூர்யா நடிக்கும் வாடிவாசலுக்கான வேலை பரபரப்பாக போய்கொண்டு இருக்கிறதாம். அதில் சூர்யாவும், அமீரும் தற்போது உறுதியான நிலையில் மற்ற நடிகர்கள் தேர்வும் விரைவில் இருக்குமென தெரிகிறது. 


அதேபோல் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் திரைப்படத்துக்கு ஸ்கிர்ப்ட் செய்துள்ளார் வெற்றிமாறன். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார்.  வடசென்னையின் ராஜன் கதையை உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். ராஜனின் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட காலக்கட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.வெப் சீரிஸாக இதனை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், கரண்கார்க்கி எழுதியுள்ள இந்த ராஜன்வகையறா கதையை அப்படியே உருவாக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார் .




மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் சுயசரிதையையும் வெப் சீரிஸாக எடுக்க முயற்சிகள் நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜயை வைத்து விரைவில் படம் எடுக்கவுள்ளதாகவும், விஜய் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறிய வெற்றி, சூப்பர் ஸ்டாரில் ஒருவரான விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கமல்ஹாசனுக்காகவும் ஒரு திட்டம் இருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் அதுவும் நடக்கும் எனவும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 


கை நிறைய படங்கள் வைத்துள்ள வெற்றிமாறனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது என பலரும் இணையத்தில் ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.




 சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துக்கொண்ட வெற்றிமாறன் திரைத்துறை சார்ந்த  தனது நிலைப்பாட்டை எடுத்து வைத்தார். எழுத்தாளர் ம.தொல்காப்பியன் எழுதிய ‘ சினிமா ஒரு காட்சி இலக்கியம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் “ 25 வருடங்களாக சினிமா விமர்சனங்களை உற்றுநோக்கி வருகிறேன்.  நல்ல விமர்சகர்களே இல்லை. விமர்சனங்கள் சரியாக இருந்தால்தான் நல்ல திரைப்படங்கள் வெளியாகும். விமர்சனம் என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்புகளை அரசியல் சாயலில் திணிக்கின்றனர்” என தெரிவித்தார் மேலும் சினிமாவை ஒரு கலையாக பார்க்கும் புத்தக படைப்புகள் வெகு குறைவாகவே உள்ளது என வேதனை தெரிவித்தார். 


Survivor Tamil: சைவ பெண்ணுக்கு அசைவ பரிசா...? சர்வைவரில் வெடித்தது சர்ச்சை!