திரையுலகில் ஆதிக்கம் செய்து அரசியலுக்கு வந்து டிசம்பரில் இயற்கை எய்திய ஆளுமைகள்...

சினிமா துறையில் அசைக்கமுடியாத நட்சத்திரங்களாக இருந்து அரசியல் களத்தில் தலைவர்களாக இருந்து டிசம்பர் மாதத்தில் உயிரிழந்த ஆளுமைகள்.

Continues below advertisement

மரணம் என்பது ஒரு மனிதனாக பிறந்த அனைவருமே ஒரு நாள் எதிர்கொள்ள வேண்டிய நிலை தான்.  ஆனால் ஒரு சிலரின் இழப்பு என்பது பல லட்சக்கணக்கானோரை ஆட்டிப்படைக்கிறது. அதிலும் அவர்கள் திரையுலம், அரசியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களாக இருக்கும் போது அவர்கள் மீது அளவு கடந்த அன்பு செலுத்தியவர்களுக்கு அது பெரிய பாரமாக அமைகிறது. நீண்ட காலத்திற்கு அவர்களின் நினைவுகள் சூழ்ந்து இருக்கும்.

அப்படி தமிழ் சினிமா துறையில் அசைக்கமுடியாத ஜாம்பவான்களாக இருந்த நடிகர்கள் அவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் களத்தில் இறங்கி தலைவரானார்கள். அந்த வகையில் மக்களுக்கு பெரும் தொண்டாற்றிய தலைவர்களாக இருந்த சிலர் டிசம்பர் மாதத்தில் உயிரிழந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தினர். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்...

Continues below advertisement

 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் :

பழம்பெரும் நடிகரும், முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் ஒரு நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் நுழைந்தவர். தன்னுடைய படங்களில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கருத்துக்களை எடுத்துச் சொன்னார். அறிஞர் அண்ணாவின் மீது கொண்டிருந்த ஈர்ப்பால் அரசியலில் இறங்கி பின்னர் அதிமுக கட்சியில் தலைவரானார். திரைவாழ்வில் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் ஏராளமான நன்மைகளை மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்தவர். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். 1984ம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

 

புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா :

தன்னுடைய குடும்பத்தின் நெருக்கடி காரணமாக திரைத்துறையில் நுழைய வேண்டிய காட்டாயத்தால் வழக்கறிஞராக வேண்டும் என்ற தனது ஆசையை தியாகம் செய்து நடிகையானார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பின்னாளில் திரையுலகம் இதுவரையில் காணாத பல்துறை நடிகையாக விளங்கினார். மக்களுக்கு பயன்படும் வகையில் பல நல்ல நல திட்டங்களை செயல்படுத்தினார். வீர மங்கையாக விளங்கிய ஜெயலலிதா உடல்நல குறைவால் பல நாட்கள் போராடி வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி 2016ம் ஆண்டு காலமானார்.  



கேப்டன் விஜயகாந்த் :

சினிமா மீது இருந்த மோகத்தால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து பல அவமானங்கள், போராட்டங்களை கடந்து ஒரு நடிகராக ஜெயித்து காட்டியவர் நடிகர் விஜயகாந்த். ஒரு நடிகராக ஜொலித்த சமயத்திலும் ஏழை எளியவருக்கு அனைத்து வகையிலும் உதவி கரம் நீட்டியவர். எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவரையும் சமமாக நடத்தக்கூடிய பண்பாளன். தேடி வந்தோரிடம் இல்லை என திருப்பி அனுப்பாத கொடைவள்ளல். நடிகர்கள், இயக்குநர்களை என பல புதியவர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர்.

மக்களை  ஒரு தலைவனாக இருந்து வழிநடத்த வேண்டும் என்பதற்காக தனிக்கட்சி ஒன்றை துவங்கினார். 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி தலைவரானார். அவரின் மனம் பல சாதனைகள் செய்ய விரும்பினாலும் அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறைய துவங்க தேமுதிக கட்சியின் வளர்ச்சியும் தேய துவங்கியது.

சினிமாவிலும் அரசியலிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்திய விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி உடல்நல குறைவால் காலமானார்.  

 
Continues below advertisement
Sponsored Links by Taboola