சத்தமின்றி நடந்து முடிந்த குட் நைட் நாயகி மீதா ரகுநாத்தின் திருமணம்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!


குட்நைட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகை மீத்தா ரகுநாத். முதல் நீ முடிவும் நீ திரைப்படத்தின் மூலம் கவனமீர்த்த இவருக்கு குட் நைட் படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.  இவருக்கு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தன் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து மீத்தா ரகுநாத் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். மேலும் படிக்க


Watch Video: வறுமை பற்றி வருந்திய இளைஞர்: வீடியோ பார்த்து கலங்கி பைக் வாங்கிக் கொடுத்த கேபிஒய் பாலா!


விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு', ‘குக்கு வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனங்களை வென்று பிரபலாமானவர் கேபிஒய் பாலா. சமீப காலமாக தொலைக்காட்சி உலகம் தாண்டி வெள்ளித்திரைக்கும் பயணித்துள்ளதுடன், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். இவற்றையெல்லாம் தாண்டி பாலாவின் உதவும் குணம் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க


கர்த்தர் பெயரை வைத்து கொள்ளை.. கடுப்பான ஜேம்ஸ் வசந்தன்.. காரணம் இவர்களா?


நிகழ்ச்சி தொகுப்பாளர், இசையமைப்பாளர், தமிழ் ஆர்வலர் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் ஜேம்ஸ் வசந்தன், தன மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறி இணையவாசிகள் மத்தியில் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார். மேலும் இளையராஜா தொடங்கி விஜய்யின் அரசியல் வருகை வரை சினிமா, அரசியல், பிக்பாஸ் என அனைத்து சப்ஜக்ட்களிலும் தன் கருத்தை ஆணித்தரமாக முன்வைத்து வருகிறார். அந்த வகையில் கர்த்தர் பெயரை வைத்து மோசடி செய்யும் வகையில் பேசிய சுவிசேஷ வீடியோவை குறிப்பிட்டு பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க


ஏறுமுகத்தில் காடுவெட்டி வசூல்: ஆர்.கே.சுரேஷ் படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!


இயக்குநர் பாலாவால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டு ஆருத்ரா மோசடி வழக்கின்  சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் காடுவெட்டி நடுநாட்டுக்கதை. சோலை ஆறுமுகம் இப்படத்தினை இயக்கியுள்ளார். மார்ச், 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் மூன்று நாள்  பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க


ஆர்யா - சந்தானத்தின் எவர்க்ரீன் காமெடி படம்: ரீ ரிலீசாகும் பாஸ் என்கிற பாஸ்கரன்: தேதி இதுதான்!


ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த காமெடி திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.  ஆர்யா - சந்தானம் இருவரும் இணைந்து இப்படத்தில் காமெடியில் கலக்கியிருந்த நிலையில், இன்றுவரை இப்படத்தின் காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் படிக்க