ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ள ‘காடுவெட்டி’ (Kaaduvetty) திரைப்படத்தின் முதல் மூன்று நாள்கள் வசூல் தொகை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


பாமக தலைவரின் கதை


சாதியப் படம் எனும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்.15ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘காடுவெட்டி நடுநாட்டுக்கதை’. 


மறைந்த முக்கிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களுள் ஒருவரான காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகிஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் இப்படத்தில் நடித்துள்ளதும் பெரும் பரபரப்பை ரிலீஸூக்கு முன்னதாகவே கிளப்பியது.


விவாதத்தைக் கிளப்பிய காட்சிகள்


இயக்குநர் பாலாவால் ஆர்.கே. சுரேஷ் தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து ஹீரோவாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படத்தினை இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள நிலையில், ஸ்ரீகாந்த் தேவா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


இப்படத்தில் பள்ளி படிக்கும் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபரை அரிவாள் கொடுத்து, அப்பள்ளி மாணவியையே வெட்டச் சொல்லும்படியான காட்சி இடம்பெற்றுள்ள நிலையில், ஏற்கெனவே இணையத்தில் இக்காட்சி பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.


3 நாள் வசூல் நிலவரம்


இப்படி பல பரபரப்புகள், குற்றச்சாட்டுகளுக்கிடையே வெளியாகியுள்ள காடுவெட்டி திரைப்படம் நிதானமாக வசூலில் முன்னேறி வருகிறது. இந்தியத் திரைப்படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் Sacnilk தளத்தின்படி காடுவெட்டி திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.15 லட்சங்களை வசூலித்துள்ளது. இரண்டாம் நாள் காடுவெட்டி திரைப்படம் ரூ.9 லட்சங்களை வசூலித்துள்ளது. 


இந்நிலையில் இரண்டாம் நாள் சற்று சறுக்கினாலும்,  மூன்றாம் நாள் இப்படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி நேற்று ரூ.12 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாக காடுவெட்டி திரைப்படம் இதுவரை ரூ.36 லட்சங்களை வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் சாதியப் படம் எனும் முத்திரைகளைத் தாண்டி அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும்படியாக இப்படம் உள்ளதாக சமூக வலைதளங்களில் இன்னொரு தரப்பினர் விமர்சனங்களை முவைத்து வரும் நிலையில், இப்படத்தின் வசூல் வரும் நாள்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: James Vasanthan: கர்த்தர் பெயரை வைத்து கொள்ளை.. கடுப்பான ஜேம்ஸ் வசந்தன்.. காரணம் இவர்களா?


Meetha Raghunath: சத்தமின்றி நடந்து முடிந்த குட் நைட் நாயகி மீதா ரகுநாத்தின் திருமணம்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!