தமிழ் சினிமாவில் புதிய காமெடி அலையினை உருவாக்கி ரசிகர்களை சிரிக்க வைத்த இயக்குநர்களில் ஒருவர் எம்.ராஜேஷ். ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்து தமிழ் சினிமாவில் கவனமீர்த்த இயக்குநர் எம்.ராஜேஷ்,  தொடர்ந்து பல காமெடி திரைப்படங்களை எடுத்து லைக்ஸ் அள்ளினார். அந்த வரிசையில் முக்கியமான திரைப்படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ (Boss Engira Bhaskaran).


சூப்பர்ஹிட் திரைப்படம்


2010ஆம் ஆண்டு ஆர்யா, நயன்தாரா, சந்தானம், சித்ரா லக்‌ஷ்மணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர்ஹிட் காமெடி திரைப்படமாக அமைந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஆர்யா - சந்தானம் காம்போவில் உருவான இப்படத்தின் காமெடி ட்ராக்குக்கு என தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது. படத்தின் மிகப்பெரும் தூணாக இந்த காமெடி ட்ராக் அமைந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்றெல்லாம் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வந்தனர்.


மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் வரிசையில் தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படமும் இடம்பெற உள்ளது. 


ரீ-ரிலீஸ் தேதி 


அமிர்தா ஃபிலிம்ஸ் நிறுவனம் வரும் மார்ச் 22ஆம் தேதி இப்படத்தினை தமிழ்நாடு முழுவதும் ரீரிலீஸ் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


இயக்குநர் எம்.ராஜேஷ் தற்போது SCREEN SCENE MEDIA தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ எனும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின்  இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து அதர்வா - அதிதிசங்கர் இணைந்து நடிக்கும், புதிய படம் ஒன்றையும் இயக்க உள்ளார்.


கடந்த சில ஆண்டுகளாக எம்.ராஜேஷ் இயக்கிய திரைப்படங்கள் போதிய வரவேற்பினைப் பெறாத நிலையில், வெப் சீரிஸ், அந்தாலஜி என ராஜேஷ் ட்ராக்கை மாற்றினார். இறுதியாக இவர் இயக்கத்தி ஹன்சிகா, சாந்தனு, முகேன் உள்ளிட்டோர் நடித்த MY3 வெப் சீரிஸ் வரவேற்பினைப் பெற்றது. இந்நிலையில் ராஜேஷ் இதேபோல் சினிமா உலகிலும் விரைவில் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


மேலும் படிக்க: James Vasanthan: கர்த்தர் பெயரை வைத்து கொள்ளை.. கடுப்பான ஜேம்ஸ் வசந்தன்.. காரணம் இவர்களா?


Meetha Raghunath: சத்தமின்றி நடந்து முடிந்த குட் நைட் நாயகி மீதா ரகுநாத்தின் திருமணம்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!