கிண்டியில் குவிந்த நட்சத்திரங்கள்; பிரமாண்டமாக தொடங்கியது கலைஞர் 100


தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் கலைஞர் 100 (Kalaignar 100) விழா இன்று மாலை 4 மணிக்கு சென்னை, கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தொடங்கி பிரமாண்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ஆம் தேதி தொடங்கி 2024 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை திமுக சார்பில் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் படிக்க


ரத்தமும் தோட்டாக்களும் நிறைந்த கேப்டன் மில்லர் ட்ரெய்லர்.. டெவிலாக மாறிய தனுஷ்!


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். 1930களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் படிக்க


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமாவுக்கு இவ்வளவு சம்பளமா..? - வாய்பிளந்த ரசிகர்கள்


பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா, ஸ்மார்ட்டாக விளையாடி ரூ. 30 லட்சம் வரையிலான தொகையை பெற்றுள்ளார்.  விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 நாட்களை கடந்துள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. மேலும் படிக்க


கேப்டன் விஜயகாந்த் படம் மீண்டும் ரிலீஸாகுது.. இந்தத் தியேட்டர்களில் அனுமதி இலவசம் மக்களே..


விஜயகாந்த் நினைவிடத்துக்கு ஏராளமான பிரபலங்கள், பொதுமக்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் விஜயகாந்தின் படம் ஒன்று தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அது 2006 ஆம் ஆண்டுஉதயன் இயக்கியத்தில் உருவான ‘பேரரசு’ படம் தான். இந்த படத்தில்  விஜயகாந்த் , டெபினா பொன்னர்ஜி , பிரகாஷ் ராஜ் , சரத் பாபு , ஆனந்தராஜ் , பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் படிக்க


கேப்டன் மில்லருக்கு சவால்விடும் அயலான்.. தனுஷை பின்னுக்கு தள்ளினாரா சிவகார்த்திகேயன்?


பொங்கல் போட்டியில் கலந்துகொள்ளும் படங்களின் ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படத்தின் இசைவெளியிட்டு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன, மேலும் மாவட்ட, மாநில வாரியாக இந்தப் படங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு பொங்கல் போட்டி யாருக்கு சாதகமானதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கு இருக்கிறது. மேலும் படிக்க


காதல் டூ கல்யாணம்: அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் ப்ளூ ஸ்டார் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!


வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் நடிகர் அசோக் செல்வன் குறிப்பிடத் தகுந்தவர். ஓ மை கடவுளே, போர் தொழில் , நித்தம் ஒரு வானம் ட், தெகிடி என அவர் தேர்வ் செய்து நடித்து வரும் படங்கள் கவனமீர்க்கின்றன.  அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாணியனுக்கும் சமீபத்தில் திருமணம்  நடைபெற்றது. அசோக் செல்வனைப் போல் கீர்த்தி பாண்டியனும் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் படிக்க