Chennai Traffic Diversion:  தலைநகர் சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரா பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.


இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், 


எந்தெந்த இடங்கள்:


பகுதி 1: ”ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை)


பகுதி 2: ஆர்.கே.மட் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை )


பகுதி 3: ஆர்கே மட் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)


எனவே, மேற்கண்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக பின்வரும் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:-


பகுதி 1: ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை) GRH பாயிண்டில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக் (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை நீதிபதி ஜம்புலிங்கம் தெரு - வலது - ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்பட்டன. 


வலது ராயப்பேட்டை ஹை ரோட்டிலிருந்து GRH நோக்கி வரும் வாகனங்கள் ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை - இடது நீலகிரிஸ் கடை மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை - வலது TTK சாலை கௌடியா மட சாலை வரை செல்லும்.


வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு. நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும்.


அஜந்தா சந்திப்பில் இருந்து அ.தி.மு.க. கட்சி அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


பகுதி 2: ஆர்.கே.மட் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை ) ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹை ரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும்.


வலது லஸ் சர்ச் சாலை-டி 'சில்வா சாலை பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை - இடதுபுறம் திரும்பி -சி.பி இராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.


ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) -இடதுபுறம் - ரங்கா சாலை வலது - கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ - லஸ் சர்ச் சாலை வழியாக - பி.எஸ்.சிவசாமி சாலை வலது - சுலிவன் கார்டன் தெரு - இடது - ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.


கிழக்கு மாட தெரு. வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர்.ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு. லஸ் அவென்யூ, முண்டக்கன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.


சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.


மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாக புறப்படும் MTC மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை - இடதுபுறம் திரும்பி - தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.


பகுதி 3: ஆர்கே மட் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை) வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி - செயின்ட் மேரிஸ் சாலை இடதுபுறம் திரும்பி சிபி ராமசாமி சாலை காளியப்பா சந்திப்பு - நேராக ஆர் ஏ புரம் 3 வது குறுக்குத் தெரு சென்று காமராஜர் சாலை -ஸ்ரீநிவாசா அவென்யூ கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர் கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.


கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட் சாலை -இடது திருவேங்கடம் தெரு - திருவேங்கடம் தெரு விரிவாக்கம் -வி.கே. ஐயர் சாலை தேவநாதன் தெரு வலது செயின்ட் மேரிஸ் சாலை இடது - ஆர். கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.


மந்தைவெளி செல்லும் MTC பேருந்துகள் - வாரன் சாலை இடதுபுறம் செயின்ட் மேரிஸ் சாலை வலதுபுறம் திரும்பி - சிருங்கேரி மட சாலை மற்றும் VK ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.


ஸ்ரீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு. திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன் பள்ளி சாலை, ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.