பொங்கலுக்கு வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


2024 பொங்கல்


பொங்கல் போட்டியில் கலந்துகொள்ளும் படங்களின் ரிலீஸ் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படத்தின் இசைவெளியிட்டு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன, மேலும் மாவட்ட, மாநில வாரியாக இந்தப் படங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமை விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு பொங்கல் போட்டி யாருக்கு சாதகமானதாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த அயலான் , தனுஷ், நடித்த கேப்டன் மில்லர், அருண் விஜய் நடித்த மிஷன் உள்ளிட்டப் படங்கள் இந்த பொங்கலில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கின்றன , தற்போதைய  நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு கடும் சவால் விட்டு வருகிறது.


அயலான்


இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ள படம் அயலான் , சிவகார்த்திகேயன், கருணாகரன், யோகி பாபு, ரகுல் ப்ரீத் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், கடந்த 4 ஆண்டுகளாக படப்பிடிப்பு பணிகள் முடிந்து நிலுவையில் இந்து வந்தது அயலான் படம் ,கொரோனா, பொருளாதார நெருக்கடிகள், மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளில் சமரசம் செய்யாமல் இருக்க படக்குழுவின் உறுதியான நிலைப்பாடு இவை எல்லாம் தான் அயலான் படம் வெளியாக தாமதமான காரணங்களாக கூறப்பட்டன.


தற்போது படக்குழுவின் முழு திருப்தியுடன் வெளியாக இருக்கும் அயலான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நிச்சயம ஒரு புது அனுபவமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது . அயலான் படத்தில் தமிழக திரையரங்க உரிமை ரூ.40 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, இந்த தொகை ரசிர்களிடம் படத்திற்கு இருக்கும் வரவேற்பையே சுட்டிக் காட்டுகின்றன.


கேப்டன் மில்லர்


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர் அதே ஜனவர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கன்னட நடிகர் ஷிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பீரியட் டிராமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் கதை எந்த மாதிரியானதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் அசுரன் படத்திற்கு பின் தனுஷை மீண்டும் புதிய கதாபாத்திரத்தில் பார்க்கும் ஆசை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இருந்து வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் தமிழக திரையரங்க உரிமம் 30 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.


தனுஷ் vs சிவகார்த்திகேயன்


தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இரு நடிகர்களின் சினிமா கேரியரில் அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள படங்கள் இந்த  ஆண்டு வெளியாகின்றன. இதில் எந்த படம் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .