ஓடிடிக்கு வரும் சிவகார்த்திகேயனின் “அயலான்”: எங்கே, எப்போது பார்க்கலாம்? முழுவிவரம்!


அயலான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'அயலான்'. ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சித்தார்த் ஏலியனுக்கு குரல் கொடுத்திருந்தார். மேலும் படிக்க


“ஆரம்பிக்கலாமா?” - கமலின் தக் லைஃப் பட ஷூட்டிங்கை தொடங்கிய மணிரத்னம்..!


மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜெயம் ரவி, த்ரிஷா என பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் படிக்க


அஜித் உடன் ஜாலி டின்னர்: நெகிழ்ச்சியில் ஆரவ்! அஜர்பைஜானில் மாஸ் பண்ணும் விடாமுயற்சி டீம்!


தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் அஜித் குமார் கடந்த ஆண்டு ஹெச். வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதுடன், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க


வாழ்க்கையில் நிறைய கசப்பான சம்பவம் நடந்திருக்கு - பிறந்தநாளில் வேதனையுடன் தெரிவித்த டி.இமான்


கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய்  நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், அர்ஜூன், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இந்த 22 வருட இசை பயணத்தில் இசையமைத்துள்ளார். மேலும் பல பாடல்கள் பாடி ரசிகர்களை தனது திறமையால் இமான் கட்டிப்போட்டுள்ளார் என்றே சொல்லலாம். மேலும் படிக்க


நான்தான் நாளைய விவேகானந்தர்.. ஆர்.ஜே.பாலாஜி பெருமைப்பட்ட தருணம் எது தெரியுமா?


காமெடி கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ரன் பேபி ரன் படத்துக்குப் பின் நடித்துள்ள படம் “சிங்கப்பூர் சலூன்” . கோகுல் இயக்கியுள்ள இந்த படம் நாளை (ஜனவரி 25) தியேட்டரில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளில் ஆர்.ஜே.பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தன்னுடைய மகனால் தான் பெருமைப்பட்ட தருணம் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் படிக்க


ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் “To Kill a Tiger”.. இதுவரை வென்ற விருதுகள் என்னென்ன?


திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது (Oscar Awards 2024) வரும் மார்ச் மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 591 படங்கள் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இதில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஓபன்ஹைமர், பார்பி உள்ளிட்ட படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க


வில்லன் ரோலில் மீண்டும் அதகளம் செய்யும் ஃபஹத் ஃபாசில்.. வரவேற்பைப் பெறும் ‘ஆவேஷம்’ டீசர்!


சென்ற ஆண்டு மலையாள சினிமா தாண்டி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி பெரும் ஹிட் அடித்த திரைப்படம் ‘ரோமஞ்சம்’. காமெடி மற்றும் பேய் கதைக்களத்தைச் சேர்ந்த இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இன்ஸ்டா ரீல்ஸை ஆக்கிரமித்து பெரும் ஹிட் அடித்தன. மேலும் படிக்க