திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பகுதியில் உள்ள வயல்வெளியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி அவர்களுக்கு அப்பகுதியில் ஒரு கோவிலின் சுற்றுப்புற பகுதிகளில் பாறையில் குழிகள் போன்ற அமைப்பில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த மானுடவியல் அறிஞர் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ரொமைன் சைமனலுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஒரு பெரிய குழிகள் அதனைச் சுற்றி சிறிய அளவிலான குழிகளும் மற்றும் வரிசையான குழிகளும் உள்ளது. இங்கு 191 குழிகள் கண்டுபிடித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வில் இந்த அமைப்பானது உலகம் முழுவதும் தென் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது எனவும் மூன்றாவதாக பழனியில் உள்ள அமைப்பானது இரண்டு முதல் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தெரிவித்தனர்.
அதாவது மனிதன் ஆவதற்கு முன் மிருகத் தோற்றத்திலிருந்து இரண்டு கால்கள் நடக்க ஆரம்பித்த நாட்களில் இந்த அமைப்பானது ஏற்படுத்தப்பட்டிருக்கும் எனவும், அதாவது இந்த கல்லாங்குடியிலானது கற்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டதாகவும், இது எதனைக் குறிப்பது என்று இன்றுவரை உலகம் முழுவதிலும் சரியான தீர்வு காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர். ஆனால் பிரான்ஸ் நாட்டு அறிஞர் கூறும் போது இது மனித இனப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் இது போன்று பரவியிருக்க கூடும் என கூறினார்.