தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் அஜித் குமார் கடந்த ஆண்டு ஹெச். வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்திருந்தார். அப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதுடன், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். 


 



'விடாமுயற்சி' டீம் :


ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு நடிகை த்ரிஷா இப்படத்தின் மூலம் மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்கிறார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் அவர்களுடன் அர்ஜூன் தாஸ், ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், அருண் விஜய், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் : 


அந்த வகையில் 'விடாமுயற்சி' படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரவ் உடன் இரவு டின்னருக்கு வெளியே சென்ற போது நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 


நடிகர் அஜித் குமார் ஆன் ஸ்க்ரீனில் மட்டுமல்லாமல் ஆஃப் ஸ்க்ரீனில் என்றுமே ஸ்டைலிஷாக தோற்றமளிக்கக் கூடியவர். மென் இன் பிளாக் கதாபாத்திரம் போல காட்சியளித்த அஜித் மிகவும் ஸ்டைலிஷாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இல்லாமல் முழுவதுமாக வெள்ளை முடியில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார் எனத் தெரிகிறது.


அஜித்துடன் டின்னர் சென்றபோது இந்தப் புகைப்படங்களை நடிகர் ஆரவ் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இவை தற்போது இணையத்தில் ஃபயர் போல பரவி வருகிறது. 


 



ஆரவ் கேரக்டர் என்ன? 


பிக்பாஸ் சீசன் 1 ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஆரவ். அவர் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் 'கலகத் தலைவன்' படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆரவ்விற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


அதைத் தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனியின் 'விடாமுயற்சி' படத்தில் நடிகர் அஜித்துடன் நடித்து வருகிறார். அவரின் கதாபாத்திரம் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை என்றாலும், அவர் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. இப்படம் ஆராவுக்கு ஒரு நல்ல திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


'விடாமுயற்சி' படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.