பாலிவுட் பிரபலத்தை கரம் பிடிக்கும் அயலான் பட நாயகி... விரைவில் டும் டும் டும்..!


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க'. அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் படிக்க


எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய ஷோபா.. என்ன செய்தார் தெரியுமா?


நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், தனது மருமகளுடன் செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ரசிகர்களால் அன்போடு தளபதி என அழைக்கப்படும் விஜய் அடுத்ததாக அரசியலிலும் அடியெடுத்து வைக்க உள்ளார். கடைசியாக விஜய் நடிப்பில் “லியோ” படம் வெளியாகியிருந்த நிலையில், இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து G.O.A.T  என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் படிக்க


புத்தாண்டு பார்ட்டியில் நடனமாடிய அஜித்... கடுப்பில் கொந்தளிக்கும் விஜய்காந்த் ரசிகர்கள்


2023 ஆம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது நடிகர் விஜயகாந்தின் மறைவு. ஊடகங்கள், மக்கள் என எல்லா இடத்திலும் விஜயகாந்த் என்கிற ஒரே பெயர் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் , விஜயகாந்தை ஒரு நடிகராக ஒரு அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் விஜய்காந்துக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள். மேலும் படிக்க


“எங்களை பார்த்தா கேவலமா தெரியுதா? “ - நடிகை ரம்பாவிடம் கோபப்பட்ட ரஜினி.. என்ன நடந்தது?


நடிகர் சல்மான் கானை கட்டியணைத்து வரவேற்றதை கண்டு ரஜினிகாந்த் கோபித்து கொண்டதாக நடிகை ரம்பா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக திகழ்ந்த நடிகைகளுள் ஒருவர் ரம்பா. அவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினிகாந்த் தன்னிடம் கோபித்து கொண்ட நிகழ்வை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படிக்க


டிக்டாக் படத்தில் காணாமல்போன 20 நிமிட காட்சிகள்.. பிரியங்கா மோகன் காரணமா? - படக்குழுவினர் குற்றச்சாட்டு


நடிகை பிரியங்கா மோகன் நடித்து வெளியான டிக்டாக் படத்தின் காட்சிகளை காணவில்லை என படக்குழுவினர் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.  எம்.கே. எண்டெர்டெயின்மென்ட் சார்பில் ராஜாஜி மாணிக்கம், பிரியங்கா அருள் மோகன், சுஷ்மா ராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி வெளியான படம் “டிக் டாக்”. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக ரிலீசாகியிருந்தது. மேலும் படிக்க


“லோகேஷூக்கு உளவியல் பரிசோதனை செய்திட வேண்டும்” : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு


வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்துக்கு தடை விதிக்கக்கோரி, லோகேஷ் கனகராஜ் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜூ முருகன் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில், ‘லோகேஷ் வன்முறை, போதைப்பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காட்டுகிறார். மேலும் படிக்க