தனுஷ் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. நேரம் குறித்த சன் பிக்சர்ஸ் - எப்போ தெரியுமா?


நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி “கேப்டன் மில்லர்” படம் வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. மேலும் படிக்க


அட... சூர்யாவுக்கு ஜோடியாகும் “குட்டி மயிலு” ஜான்வி கபூர்! ஸ்ரீதேவி கணவர் தந்த அப்டேட்!


நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக அவர் நடிக்க உள்ள திரைப்படம் சூர்யா 43. இந்தப் படத்தில் இரண்டாம் முறையாக தனது ஆஸ்தான இயக்குநர் சுதா கொங்கராவுடன் சூர்யா கைகோர்க்கிறார். இந்நிலையில், நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் பரவி வருகின்றன. அதன்படி சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தினை இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்குவதாக சென்ற ஆண்டே தகவல் வெளியானது. மேலும் படிக்க


24 ஆண்டுகளை கடந்த முகவரி .. நெகிழ்ச்சியாக பதிவிட்ட இயக்குநர் வி.இசட்.துரை!


முகவரி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் வி.இசட்.துரை நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  கடந்த 2000 ஆம் ஆண்டு அஜித்குமார், ஜோதிகா, ரகுவரன், கே.விஸ்வநாத், விவேக், மணிவண்ணன், சித்தாரா, ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘முகவரி’. வி.இசட். துரை இயக்கிய இப்படத்திற்கு எழுத்தாளர் பாலகுமாரன் வசனம் எழுதியிருந்தார். மேலும் படிக்க


மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவு.. மறவாமல் நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!


நடிகர் மயில்சாமி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் நினைவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்கல் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க சென்னை வந்தார். 1984 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்த ‘தாவணி கனவுகள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மேலும் படிக்க


பஃப்டா திரைப்பட விழா.. 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர்!


இங்கிலாந்தில் நடைபெற்ற BAFTA திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களை பற்றி காணலாம்.  சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும்   BAFTA எனப்படும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 77வது BAFTA விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது. மேலும் படிக்க