துபாயில் திரையிடப் பட்ட விஜய் சேதுபதி படத்தின் டிரைலர்

 நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா படம் வரும் ஜூன் 14 ஆம் தெதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு மகாராஜா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி துபாயில் நடைபெற்றது. மகாராஜா படத்தின் டிரைலர் துபாயின் அதி உயர கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் திரையிடப் பட்டது. புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் 3 நிமிட டிரைலர் ஒளிபரப்பாவதற்காக ஒரு கோடி வரை படக்குழு செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மேலும் படிக்க : Vijay sethupathi : புர்ஜ் கலிஃபாவில் திரையிடப் பட்ட மகாராஜா டிரைலர்...3 நிமிடத்திற்கு இத்தனை கோடியா?

பிரபாஸ் திருமணம் பற்றி ராஜமெளலி

பான் இந்திய நடிகரான பிரபாஸ் நடித்துள்ள கல்கி படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 44 வயதைக் கடந்தும் பிரபாஸ் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தை பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமெளலி சமீபத்தில் தெரிவித்துள்ளார். நிச்சயமாக இந்த பதில்  நாம் யாரும் எதிர்பார்த்திராதது, 

Continues below advertisement

பிக்பாஸ் சீசன் 8 இல் காதலியுடன் டி.டிஎஃப் வாசன் ?

பிக்பாஸ் தமிழ் 8 ஆவது சீசனுக்கான போட்டியாளர் தேர்வுகளை மும்முரப் படுத்தியிருக்கிறது விஜய் தொலைக்காட்சி. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல யூடியுபர் டி.டி.எஃப் வாசன் மற்றும் அவரது காதலில் ஷாலின் ஸோயா கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க : Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும் டிடிஎஃப் வாசன்

கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்தின் நடிகை அதா ஷர்மா தனக்கு எண்டோமெட்ரியோசிஸ்ச் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். எண்டோமெட்ரியோசிஸ் (endometriosis) என்பது மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடையுது. இது ஒரு உடல்நலப் பிரச்சனை என்று குறிப்பிடலாம். இடுப்பு பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இது கருப்பையில் உள்ள திசுக்கள் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் நிலை ஏற்படும். கருப்பைக்குள் இருக்க வேண்டிய திசுக்கள் வெளியே வளரும்போது அது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். அதோடு, பிறப்புறுப்பு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த நிலை கண்டறியப்பட்டால் வலியோடு மட்டுமே நாட்களை நகர்த்த வேண்டிய சூழல் ஒருவாகும். 

மேலும் படிக்க : Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!