2024 டி20 உலகக் கோப்பையின் 25வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய அணியை விட பாகிஸ்தானுக்கு மிக முக்கியமானதாக இருக்கும். நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற பாகிஸ்தான் அணியினரும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்யும். ஆனால் ஏன் அப்படி..? அமெரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றி பாகிஸ்தானுக்கு எப்படி சூப்பர் 8 வாய்ப்பை ஏற்படுத்தி தர போகிறது என்பதை இங்கே பார்க்கலாம். 


குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், இன்று இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியை பாகிஸ்தான் அணி எதிர்பார்க்கும். இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றை அடைவதற்கான பாதை திறந்து இருக்கும். 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, அதில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 


இதன் காரணமாக பாகிஸ்தான் இதுவரை 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்கா 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்று அமெரிக்கா இந்தியாவை வீழ்த்தினால், லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் வெளியேறுவது உறுதி. ஏனெனில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு அமெரிக்கா 6 புள்ளிகளை பெற்றுவிடும். மேலும், பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தினால் 4 புள்ளிகளை மட்டும் பெற முடியும். அதேவேளையில், பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட்டும் மோசமாக உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் அமெரிக்காவுக்கு எதிரான இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் அணி விரும்புகிறது. 


இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டுள்ள அமெரிக்கா: 


2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணி இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அமெரிக்க அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியான கனடாவுக்கு எதிராக அமெரிக்கா தனது முதல் போட்டியில் விளையாடியது. கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் அமெரிக்காவின் இரண்டாவது போட்டி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. அதிலும் அமெரிக்க அணி பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் தோற்கடித்தனர். 


இந்தியா - பாகிஸ்தான் இதுவரை நேருக்கு நேர்:


இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச டி20 போட்டியில் நேருக்குநேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். 


கணிக்கப்பட்ட இரு அணிகளில் விவரம்:


இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.


அமெரிக்க அணி:


ஸ்டீவன் டெய்லர், மோனாங்க் பட்டேல் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரவல்கர், அலி கான்.