கேரளா ஸ்டோரீஸ் படத்தில் நடித்த அடா ஷர்மா தனக்கு எண்டோமெட்ரியோசிஸ் என்ற உடல்நலப் பிரச்சனை இருப்பதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருந்தார். 


அடா தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலப் பிரச்சனை குறித்தும் அதை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில்,நான் நடிகை என்பதால் தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு ஏற்றவாறு என் உடலை தயார் செய்ய வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் கூறும்போது,” கேளரா ஸ்டோரியில் மூன்று லுக்கில் நான் வர வேண்டியிருந்தது. முதல் பாதியில், காலேஜ் பெண் லுக் வர மெலிந்த உடல் தேவைப்பட்டது. அதே படத்தில் கொஞ்சம் எடை அதிக்க வேண்டியிருந்தது. பஸ்டர் படத்திலும் அப்படியே. கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு என் உடல் எடையை மாற்ற வேண்டியிருக்கும். அப்படி செய்யும்போது, உடல் எடையை குறைப்பதோ, அதிகரிப்பதோ எளிதாக செய்துவிட முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் உடலை தயார் செய்ய வேண்டும். 


ஷூட்டிங்கிற்காக அப்படி செய்ய வேண்டும். ஆனால், நிஜத்தில் அப்படியில்லை. மிகவும் கவனம் எடுத்து உடல் எடையை குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம். அதே போல, படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நடிக்க வேண்டியிருக்கும். உடல்நலத்தில் அதிகம் கவனம் எடுக்காததால் எனக்கு முதுகு தொடர்பான பிரச்ச்னைகள் ஏற்பட்டது. அதோடு, எண்டோமெட்ரியோசிஸ் என்ற உடல்நலப் பிரச்சனையில் எனக்கு ஏற்பட்டது. 48 நாட்கள் மாதவிடாய் நிகழ்வு தொடர்ந்தது.” என்று வலி மிகுந்த நாட்கள் பற்றி பேசியிருந்தார். 42 வயதில் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உடன் சினிமாவில் நடித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


எண்டோமெட்ரியோசிஸ்:


எண்டோமெட்ரியோசிஸ் (endometriosis) என்பது மாதவிடாய் சுழற்சியுடன் தொடர்புடையுது. இது ஒரு உடல்நலப் பிரச்சனை என்று குறிப்பிடலாம். இடுப்பு பகுதியில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இது கருப்பையில் உள்ள திசுக்கள் பிறப்புறுப்பு பகுதியில் வளரும் நிலை ஏற்படும். கருப்பைக்குள் இருக்க வேண்டிய திசுக்கள் வெளியே வளரும்போது அது மாதவிடாய் சுழற்சியைப் பாதிக்கும். அதோடு, பிறப்புறுப்பு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும். இந்த நிலை கண்டறியப்பட்டால் வலியோடு மட்டுமே நாட்களை நகர்த்த வேண்டிய சூழல் ஒருவாகும். 


கடந்த 2021-ல் எடுக்கப்பட்ட சர்வேயின் படி, 42 மில்லியன் பெண்கள் இந்தியாவில் எண்டோமெட்ரியோசிஸ் நிலை பாதிப்பு ஏற்பட்டு அதோ வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. 


அறிகுறிகள் என்ன?



  • மாதவிடாய் நாட்களில் கடுமையான வலி

  • மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு

  • தீவிர வயிற்றுப்போக்கு

  • செரிமான பிரச்சனை

  • மயக்கம் வருதல்

  • மலம் கழிக்கும்போது அசெளகரியமாக உணர்தல்

  • நாள்பட்ட இடுப்பு வலி

  • பிறப்புறுப்பில் கடுமையான வலி 


தீர்வு:


இந்த பாதிப்பால் பெண்கள் கருவுறுவதில் சிக்கல் ஏற்படும். இதற்கு தீர்வு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. வலியை குறைக்க மட்டும் வலிகள் உள்ளது. எண்டோமெட்ரியோசிஸ் எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணம் என்ன  உள்ளிட்டவற்றிற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு ஏற்றவாறு உணவுப் பழக்கம், உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதோடு, ஓய்வு மிகவும் அவசியமானது. இந்த நிலையில், வலியை கட்டுப்படுத்த முடியுமே தவிர குணமாக்கும் வழிகள் ஏதும் மருத்துவத்தில் இல்லை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.