தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் 382ஆவது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை தினம் அன்று சென்னை தொடர்பாக தமிழ் சினிமாவில் வெளி வந்த பாடல்களை கேட்போம்.


1. சென்னை வட சென்னை:


நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் மெட்ராஸ். இந்தப் படத்தில் இப்பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் ஹரிஹரசுதன் மற்றும் மகாலட்சுமி குரலில் அமைந்திருக்கும் . 


"எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு...
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு...

முள்ளு தச்ச கூட்டுகுள்ள
காககுஞ்சா வாழ்ந்த கூட
பள்ளிகூட புள்ள போல துள்ளி குதிப்போம்...
மொட்டைமாடி மேல நாங்க
தொட்டி செடி போல இல்ல
கூட்டமாக கூடி வாழும் காட்டு மரம் தான்..."


 



2. வணக்கம் வாழவைக்கும் சென்னை:


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா திரைப்படத்தில் இந்தப் படல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை முகேஷ் பாடியிருப்பார். இப்பாடலுக்கு கிரிஷ் இசையமைத்திருப்பார். 


"பத்து பட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் கான்கிரீட்காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் ரோடு இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே.."


 



3.  சான்ஸே இல்லை:


இசையமைப்பாளர் அனிருத்  இசையில் வெளியான ஆல்பத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் முழுவதும் சென்னையின் சிறப்பை கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும். இதை அனிருத் பாடியிருப்பார். 


"நீ எந்த ஊரோட
உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும்
டா அதுதான் இந்த ஊருடா
இந்த ஊருடா


எங்க பீச் காத்து
மேல பட்டா போதும் டா
உனக்கு நல்ல ராசி டா
இனி நீ சென்னை
வாசி டா.."


 



4. மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்:


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த மே மாதம் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை ஸ்வர்ணலதா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரும் பாடியிருப்பார்கள். 


"மெட்ராஸின் ஹீரோ
அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ
குடி மினரல் வாட்டர்


 மெட்ராஸின் கீதம்
அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டான் ஒரு
போட்டோ போட்டோ கையில்தான்.."


 



5. சென்னை சிட்டி  கெங்கஸ்டர்:


சிவா,ப்ரியா ஆனந்த ஆகியோர் நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை அனிரூத் இசையமைத்து பாடியிருப்பார்.  அவருடன் ஹிப்ஹாப் தமிழா உள்ளிட்டோரும் இந்தப் பாடலை இணைந்து பாடியிருப்பார்கள். 


"நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்

இது தான் டா சென்னை கெத்து
நட்பு தான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னை டா சென்னை டா.."


 



இவ்வாறு சென்னையை பற்றி தமிழ் சினிமாவில் சில பாடல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ''உங்கள கல்யாணம் பண்ணனும் மேடம்’’ ரசிகரின் கேள்வியும், குஷ்புவின் கிண்டலான பதிலும்!