தமிழ் திரையுலகில் 1990 காலகட்டங்களில் ரசிகர்களின் ஆஸ்தான நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அப்போது, ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என்று அப்போதைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நாயகியாக நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  குஷ்புவிற்காக அவரது ரசிகர்கள் கோவில் கட்டிய சுவாரஸ்யமான சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்ததுண்டு.


குஷ்பு சமீபத்தில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், அவர் மிகவும் உடல் எடை மெலிந்து திரைப்படங்களில் நடிக்க வந்தபோது இருந்த தோற்றத்திற்கு மாறிவிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும், பலர் குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.




அப்போது, குஷ்புவின் படத்தை பார்த்த குறும்புக்கார ரசிகர் ஒருவர், நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா மேடம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.









அவரது கேள்விக்கு நகைச்சுவையாகவே பதிலளித்துள்ள நடிகை குஷ்பு, மன்னிக்கவும் நீங்கள் மிகவும் தாமதம். சரியாக சொல்ல வேண்டுமென்றால் 21 வருடங்கள் தாமதமாக கேட்டுவிட்டீர்கள். இருந்தாலும் என்கணவரிடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என்று பதிவிட்டு சிரிப்பு பொம்மைகளை பதிவிட்டுள்ளார். நடிகை குஷ்புவின் இந்த பதிவிற்கு பலரும் நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர்.நடிகை குஷ்பு பிரபல இயக்குனர் சுந்தர்.சி.யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.




கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு குஷ்பு தோல்வியை தழுவினார்,. அதன்பின் அரசியல் களத்தில் பெரியளவில் அவர் செயல்படவில்லை. தற்போது, நடிகை குஷ்பு நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். குஷ்பு ரஜினிகாந்துடன் இணைந்து ஏற்கனவே அண்ணாமலை, மன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்ணாத்த படத்தில் குஷ்புவுடன் இணைந்து நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


'நான் பூ படம் போட்டாலும் அதை சுய இன்பத்தோட ஒப்பிடுறாங்க' - கொதிக்கும் நடிகை!