டெல்லி அருகே பாலியல் தொழில் ஈடுபட்டு வந்த இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி டெல்லியில் வசித்து வருபவர் முகமது ஷாஹீத். இவருடைய மனைவி பாலியல் தொழில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இவருடைய மனைவி அவருடைய நண்பர் ரிங்கு சிங் உடன் சேர்ந்து குருகிராம் பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவருடைய மனைவி சச்சின் என்ற நபரை சந்தித்துள்ளார். அவருடன் குருகிராம் பகுதியில் உள்ள விடுதில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அந்த சமயத்தில் அப்பெண்ணை சச்சின் கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரிங்கு சிங் ஷாஹீதிற்கு தகவல் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அங்கு சென்ற ஷாஹீத் ரத்த வெள்ளத்தில் இருப்பது தன்னுடைய மனைவி என்று உறுதி செய்துள்ளார். அத்துடன் காவல்துறையினருக்கும் புகார் அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பெண்ணுடன் தங்கி இருந்த சச்சின் என்ற நபரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக டெல்லியில் காணாமல் போன இரண்டு வயது குழந்தை ஒன்று நேற்று சடலமாக பஞ்சாப் பாக் பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த குழந்தையின் சொந்த அத்தை யமுனா மற்றும் அவருடைய கணவர் ராஜேஷ் ஆகிய இருவரும் குழந்தையை கொலை செய்துவிட்டு தூக்கி வீசியது தெரியவந்துள்ளது. அவர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் தங்களுடைய குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர். அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் டெல்லி பகுதியில் நடைபெற்று உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மனைவியாக நினைத்து படுக்கைக்கு அழைத்ததால் விஷம் கொடுத்து மாமனாரை கொன்ற மருமகள் கைது