தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலை தடை செய்ய வேண்டும் என்று கூறி அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ’புஷ்பா’ படத்தை தயாரித்துள்ள திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
முன்னதாக, படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அண்மையில் படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய ‘ஓ சொல்றியா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலான இந்தப் பாடலை தற்போது வரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த நிலையில் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று கூறி ஆந்திராவில் உள்ள ஆண்கள் அமைப்பு ஒன்று வழக்கு தொடர்ந்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் அளித்துள்ள புகாரில், இந்தப் பாடல் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாக சித்தரிப்பதாகவும், அவர்கள் செக்ஸ் -யை மட்டும் பற்றியே சிந்திப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. புஷ்பா திரைப்படம் செம்மரக்கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்