கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எல்லாம் வசூலில் இறக்கத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இப்படியான நிலையில் பண்டிகை கால படங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. இதில் எப்போதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கால படங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. காரணம் பண்டிகை மட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகளில் தேர்வு கால விடுமுறைகளும் விடப்படுவதால் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்பதால் எப்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படங்களை வெளியிட திரைத்துறையினர் விரும்புபவர். 


அந்த வகையில் நடப்பாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாகியுள்ளது. 


டங்கி 


ராஜ்குமார் ஹிரானி இயக்கித்தில் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளஷல், பொம்மன் இரானி, விக்ரம் கொச்சார், சதிஷ் ஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ‘டங்கி’. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் இணைந்து  இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் ப்ரித்தம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. டங்கி படம் sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவல்படி, முதல் நாளில் ரூ.29.2 கோடியும், 2வது நாளில் ரூ.20.2 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த படம் இந்தாண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான் படங்களை போல பிற மொழிகளில் டப் செய்யப்படாமல் இந்தியில் மட்டும் வெளியாகியுள்ளது. 


சலார் - பாகம் 1 சீஸ் ஃபயர் 


கன்னட திரையுலகில் கேஜிஎஃப் 1 மற்றும் 2 ஆம் பாகங்களின் மூலம் பிரமாண்ட மாஸ் இயக்குநராக உருவெடுத்தவர் பிரஷாந்த் நீல். இவர் பான் இந்திய நடிகரான பிரபாஸை வைத்து எடுத்துள்ள திரைப்படம் ‘சலார்’. இப்படத்தின் முதல் பாகமான “சலார் - சீஸ் ஃபயர்” என்ற படம் நேற்று (டிசம்பர் 22)  வெளியானது. இதில் பிரபல மலையாள பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இதனால் இப்படம் முதல் நாளில் ரூ.104.33 கோடி வசூல் செய்துள்ளது. 


சபாநாயகன் 


அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “சபாநாயகன்”. இந்த படம் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கும் குறைவான வசூலையே பெற்றுள்ளது.  


நேரு 


ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால், அனஸ்வரா ராஜன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘நேரு’. இந்த படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. இப்படம் முதல் நாளில் ரூ.2.8 கோடியும், 2வது நாளில் ரூ. 2.25 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Saba Nayagan Review:'ஜாலியான காதலும்.. பிரேக் அப் காதலிகளும்’ - அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ பட முழு விமர்சனம் இதோ..!


Salaar Review: எடுபட்டதா சலாரின் சாகசம்? தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா பிரபாஸ்? முழு விமர்சனம் இதோ!


Dunki Review : ஹாட்ரிக் வெற்றி அடித்தாரா ஷாருக்கான்..? டங்கி படம் திரைவிமர்சனம்