Bigg Boss Telugu 7: பிக்பாஸ் 7 சீசனில் ஷகிலாவும், கிரணும் பங்கேற்றிருப்பது தமிழ் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 


பிக்பாஸ் சீசன் 7:


தமிழியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் தமிழில் பிக்பாஸ் 7வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனால், பிக்பாஸ் போட்டியில் எந்தெந்த போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டுள்ளது. 


நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் புரோமோஷன் விழாவில் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஷகிலா, நடிகை கிரண், பிரியங்கா ஜெயின், அர்ஜூன் அம்பதி, ஷோபனா ஷெட்டி, பாடகி தாமினி பட்லா, அமர்தீப், யூடியூபர் டேஸ்டி தேஜ, ஆட்டா சந்தீப், இசையமைப்பாளர் போலே ஷவாலி, மருத்துவர் கௌதம் கிருஷ்ணா, சின்னத்திரை நடிகை பிரின்ஸ் யாவர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


தெலுங்கில் ஷகிலா:


தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷகிலா தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சமூக ஊடகம் ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ஷகிலா, தமிழில் பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 


இந்த நிலையில் திடீரென தெலுங்கு பிக்பாஸில் ஷகிலா பங்கேற்றதால் தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகள், காதல் கதைகள், காமெடி இருப்பதால், எதையும் நேருக்கு நேராக பேசும் ஷகிலா தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தெலுங்கு சீசனில் அவர் பங்கேற்றுள்ளதால் தெலுங்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


கிரண்:


இதேபோல், தமிழில் ஜெமினி, வின்னர், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த கிரண் கடந்த சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு இல்லாமல் சமூக வளைதளத்தில் மட்டும் வீடியோக்கள் வெளியிட்டு ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் அவரும் பங்கேற்றிருப்பதால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது. இவர்களுடன் காதல் சுகமானது படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் சிவாஜியும் தெலுங்கு பிக்பாஸ் சீசனில் 7ல் பங்கேற்றுள்ளார். 


தற்போது அமெரிக்கா, சீனா என வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் கமல்ஹாசன், சென்னை திரும்பியதும் தமிழில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கும் என கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் 7 தொடர்பாக விஜய் டிவி வெளியிட்ட புரோமோ வீடியோவில், பிக்பாஸில் இரண்டு வீடா என அதிர்ச்சியுடன் கமல்ஹாசன் கேட்பது இடம்பெற்றுள்ளது. இதனால், பிக்பாஸ் சீசன் 7ல் இரண்டு வீடு இருக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 



மேலும் படிக்க: 800 Trailer: குடியுரிமையே இல்லாமல் கொத்தடிமையாக வந்தவன்.. உலகமே போற்றும் பெஸ்ட் பவுலர்.. வெளியானது 800 படத்தின் ட்ரெய்லர்!


Thani Oruvan2: தனி ஒருவன் கதை வேண்டாம்: வாய்ப்பை மிஸ் செய்தாரா பாகுபலி நடிகர்?