Thani Oruvan2: தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் பிரபாஸை நடிக்க வைக்க கேட்டதாக படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். 


2003ம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மோகன் ராஜா. இதே படத்தில் தான் நடிகராக அறிமுகமானார் ஜெயம் ரவி. முதலில் கதையை எழுதிய மோகன் ராஜா தனது தம்பியான ஜெயம் ரவியை வைத்தே ஜெயம் படத்தை எடுத்திருந்தார். முதல் படமே இருவருக்கும் நல்ல வரவேற்பை பெற்றதால் மோகன் ராஜா நல்ல கதையை எடுக்கும் இயக்குநராகவும், ஜெயம் ரவி முன்னணி ஹீரோவாகவும் உயர்ந்தனர். 


அடுத்தடுத்து இருவரும் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் 2015ம் ஆண்டு அண்ணன், தம்பி கூட்டணி மீண்டும் இணைந்தது. தனி ஒருவன் என்ற பிளாக் பஸ்டர் படத்தை இயக்கிய மோகன் ராஜா, ஜெயம் ரவிக்கு அதிரடி ஆக்‌ஷனில் திருப்புமுனையாகவும் அப்படம் அமைந்தது. படத்தில் இடம்பெற்றிருந்த வில்லனான சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு ஹீரோவை தாண்டி அதிக ரசிகர்கள் இருந்தனர். நேர்த்தியான வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமியும், வில்லனை பிடிக்க போராடும் போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவியும் நடிப்பில் அசத்தி இருப்பார்கள். 


கதை அம்சமும், வசனங்களும், அரசியலும், வில்லத்தனமும் என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிக்க வைத்தது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனி ஒருவன் 2 அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த முறை ஹீரோவை எதிரி தேடி வருவான் என கூறி இருக்கும் தனி ஒருவன் 2 அறிவிப்பு படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 



இந்த நிலையில் அண்மையில் நேர்க்காணலில் பங்கேற்ற இயக்குநர் மோகன் ராஜா, 2015ம் ஆண்டுக்கு முன்னதாக பிரபாஸிற்கு கதை எழுத வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். அப்பொழுது தன்னிடம் வித்தியாசமான கோணத்தில் ஒரு போலீஸ் கதை இருந்ததாகவும், அதில் நடிக்க பிரபாஸை அணுகியதாகவும் கூறியுள்ளார். ஆனால், காதல் கதைகளில் நடித்து வந்த பிரபாஸ் போலீஸ் கதையில் நடிக்க மறுத்து விட்டதாகவும் மோகன் ராஜா குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சை கேட்ட ரசிகர்கள், தனி ஒருவன் போன்ற பிளாக்பஸ்டர் படத்தை பிரபாஸ்  மிஸ் செய்தது அவரது அன்லக்கி என கருத்து கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க: Passion Studios: இறைவன், பார்க்கிங் ஒரே நாளில் ரிலீஸ்.. செம கடுப்பில் கோலிவுட் வட்டாரம்... காரணம் இதுதான்!


Mark Antony Trailer: 17 மணி நேரத்தில் ஒரு கோடி வியூஸ்... விஷால், எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் சாதனை!