Aadhar Free Update: ஆதார் கார்டு விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வற்கான கால அவகாசம் டிசம்பர் 17ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆதார் அட்டையில் புகைப்படம், கருவிழி, பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டும்.
இதைச் செய்ய ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தங்களது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்ததேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் போன்றவற்றை எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்நிலையில், ஆதார் அட்டை அப்டேட் செய்தவதற்கான கால அவகாசத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நீடித்துள்ளது. அதாவது, செப்டம்பர் 17ஆம் தேதி தான் கடைசி நாளாக இருந்த நிலையில், டிசம்பர் 17ஆம் தேதி வரை நீடித்தது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்.
ஏதற்காக அப்டேட் செய்ய வேண்டும்?
ஆதார் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளை தவிர்ப்பது. மேலும், திருமணம் காரணமாக ஒரு நபரின் பெயர் மற்றும் முகவரியில் மாற்றங்கள் ஏற்படலாம். சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஒரு தன்னுடைய மொபைல் எண், இமெயில், முகவரி போன்றவற்றை மாற்றி இருக்கலாம். மேலும், குழந்தைகளின் ஆதார் விபரங்களை அப்டேட் செய்வதற்கு விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இதன்படியே, ஒரு குழந்தை 15 வயதை தாண்டியவுடன் அவரது அனைத்து பயோமெட்ரிக்களும் அப்டேட் செய்யப்பட வேண்டும்.
ஆன்லையின் அப்டேட் செய்வது எப்படி ?
- முதலில் https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
- எனது ஆதார்" தாவலைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- அங்கு 'My Aadhar' என்பதை கிளிக் செய்து, 'Update Your Aadhar’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில், உங்கள் ஆதார் நம்பரை எண்டர் செய்து captcha வெரிஃபிகேஷனை டைப் செய்ய வேண்டும். பின்னர், send otp என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் எண்ணுக்கு வந்த ஓடிபிஐ எண்டர் செய்து login என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில் நீங்கள் அப்டேட் செய்ய நினைக்கும் தகவல்களை கவனமாக அப்டேட் செய்ய வேண்டும்.
- உங்கள் அப்டேட் ரெக்குவஸ்ட் குறித்த ஸ்டேட்டஸை பற்றி தெரிந்துக் கொள்ள https://myaadhaar.uidai.gov.in/ என்ற வெப்சைட்டில் "check Enrollment & update status என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் URN நம்பர் மற்றும் captcha எண்டர் செய்து, உங்கள் அப்டேட் ரெக்குவஸ்டிற்கான ஸ்டேட்ஸை தெரிந்து கொள்ளலாம்.