Jovika Vijayakumar: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜோவிகா பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

 


விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பங்கேற்றார். பிக்பாஸ் போட்டி தொடங்கிய முதல் நாளே, ஜோவிகாவின் பெயர் சர்ச்சைக்குள்ளானது. விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே அடிப்படைக் கல்வி தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் படிக்கவில்லை என்று ஜோவிகா கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளானது.

வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனாவுடன் சண்டை, பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய ஜோவிகா, இணையத்திலும் டிரெண்டானார். இதற்கிடையே,  ரெட் கார்டு வாங்கி வெளியேறிய பிரதீப்பின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாகக் கூறி வனிதா விஜயகுமார் தன் முகத்தில் காயத்துடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார். 

 

இந்த சூழலில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா எவிக்டாகி வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதன்முறையாக ஊடகம் ஒன்றுக்கு ஜோவிகாவும் வனிதாவும் ஒன்றாக இணைந்து நேர்க்காணல் அளித்துள்ளனர். அதில், ஜோவிகா நடிகர் பாத்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்ததாகவும், அவரது முதல் வேலை பார்த்திபனுடன் தான் தொடங்கியதாகவும், முதல் சம்பளத்தை பார்த்திபடனிடம் இருந்து தான் பெற்றதாகவும் கூறியுள்ளார். 

 

மேலும், ஜோவிகா தொடர்ந்து இயக்குநருக்கு படிக்க இருப்பதாகவும் வனிதா விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் முதலில் பார்த்திபனிடம் தான் ஜோவிகா வாழ்த்து பெற்றார் என்ற வனிதா விஜயகுமார், “ஜோவிகா எப்போது வேலைக்கு வருவார்” என பார்த்திபன் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் இந்த நேர்க்காணலில் பேசிய ஜோவிகா ”பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தது நிம்மதியாக உள்ளது . சில பேருக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டி உள்ளது. கண்டிப்பாக எச்சரிக்கையும் விளக்கமும் கொடுப்பேன். வரும். வெயிட் பண்ணுங்க” எனக் கூறியுள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததில் பலவற்றை கற்றுக் கொண்டுள்ளதாகவும், பிக்பாஸ் டாஸ்குகள் சுவாரசியமாக இருந்ததாவும் கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த அனுபவம் மிகவும் நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.