பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரான ஜோவிகா விஜயகுமார் தனது ரசிகர்களுக்கு அன்பு நிறைந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகின் வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. 


இந்நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஜோவிகா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார். நடிகை வனிதா விஜயகுமார் மகள் என்ற அடையாளத்துடன் உள்ளே நுழைந்த அவர் இந்த சீசனில் மிக குறைந்த வயது போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். வந்தது முதலே ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கினார். படிக்க சொல்லி அட்வைஸ் பண்ணிய விசித்ராவை திட்டியது, சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக பேசியது உள்ள பல பிரச்சினைகள் செய்தார். அவருக்கு பலமுறை கமலே அட்வைஸ் செய்ததும் நடந்தது. 


இப்படியான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜோவிகா விஜயகுமார் தனது ரசிகர்களுக்கு அன்பு நிறைந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 


 


அதில், என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி,பாராட்டி உங்களின் உறவாக  பார்க்கும் ஒவ்வொரு அற்புதமான உள்ளத்திற்கும் நன்றி தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் நான் பிக்பாஸ் சீசன் 7 பயணத்தில் பயணித்திருக்க முடியாது. நான் இறுதிப் போட்டியாளராக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும், அதற்காக எனக்காக வழியனுப்பியவர்களுக்கும், இது என் அம்மாவிடம் திரும்புவதற்கான நேரம் என்று நான் உண்மையாக உணர்ந்தேன் என தெரிவித்துக் கொள்கிறேன். 






அவர் தான் என்னுடைய உலகம். அவரை கவனித்துக் கொள்வதும், பாதுகாப்பதும் எனது கடமை மற்றும் பொறுப்பாகும். கடந்த வாரம் நான் உறுதியாக உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், நான் விரைவில் வீட்டிற்கு வர வேண்டும் என்பது தான். பிக்பாஸ் வீட்டில் இருந்து இனிமையான நினைவுகள் மற்றும் கற்றல் அனைத்தையும் எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்வேன். 


எனது அன்பான ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் மட்டுமல்லாமல்  சிறந்த வீரர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சியின் போது பேசிய எனது உரிமைகள் மற்றும் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எதற்கும் வருந்தப்படமாட்டேன். எனது செயல்களால் உங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.