மிக்ஜாம் புயல்


நேற்று முன் தினம் சென்னையை நெருங்கத் தொடங்கிய மிக்ஜாம் புயல் முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து  தன் ஆக்ரோஷத்தை காட்டத் தொடங்கியது. சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் இருந்த போது தொடங்கிய கனமழை மற்றும் சூறைக்காற்று நேற்றிரவு வரை தொடர்ந்தது. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது.


மழை வெள்ளத்திற்கு இதுவரை 8 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்தச் சூழலில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவடடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மக்களுடன் நின்ற பிரபலங்கள்


இப்படியான நிலையில் இந்த மிக்ஜாம் புயலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படியும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணங்களை ஒரு சில பிரபலங்கள் முன்வந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சில பிரபலங்களில் பதிவு பாதிப்பிற்குள்ளான மக்களை சீண்டும் வகையில் அமைந்துள்ளது.


மழையைக் கொண்டாடிய நிவேதா பெத்துராஜ்


சென்னை முழுக்க பலத்த காற்றும் மழையும் அடித்துக் கொண்டிருந்த சூழலில் பல்வேறு மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் நீர் சூழந்து முடங்கி கிடந்த வேளையில், நடிகை  நிவேதா பெத்துராஜ்  (Nivetha Pethuraj) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் “மழை பெய்யும்போது சென்னை உலகத்தில் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் சிறந்தது” என்கிற வகையில் கூறியிருந்தார்.