Veerappan Documentary: கொலை மற்றும் கடத்தல் மர்மங்களை கொண்ட வீரப்பனின் ஆவணப்படமான ’கூஸ் முனிசாமி வீரப்பன்’ டிரெய்லரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். 

 

வீரப்பன் ஆவணப்படம்:


 

சந்தன மரக்கடத்தல், யானைகளின் தந்தம் விற்பனை என காட்டுக்குள் தனி ராஜ்ஜியம் செய்து வந்த வீரப்பனின் வாழ்க்கை பல்வேறு மர்மங்களை கொண்டது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா என மூன்று மாநிலங்களின் அரசுக்கு தொந்தரவாக இருந்த வீரப்பனின் வாழ்க்கை திரைப்படங்களாகவும், ஆவணப்படமாகவும், தொடர் சீரியலாகவும் எடுக்கப்பட்டது. 

 

வீரப்பனின் வாழ்க்கையை எத்தனை முறை திரைப்படமாக எடுத்தாலும் அதற்கான வரவேற்பு மக்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆர்.வி. பாரதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான வீரப்பனின் ஆவணப்படும் வெளியாக உள்ளது. டிசம்பர் 8ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வீரப்பனின் ஆவணப்படும் வெளியாக உள்ளதால், இன்று டிரெய்லர் வெளியிடப்பட்டது. 

 

சூர்யா வெளியிட்ட டிரெயிலர்:


 

வீரப்பனின் மர்மத்தை கூறும் ஆவணப்படத்தை நடிகர் சூர்யா டிவிட்டர் பதிவு மூலம் வெளியிட்டார். அதில், நக்கீரன் கோபால்ம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பா.பா. மோகன், நடிகை ரோகிணி, ஐபிஎஸ் அதிகாரி அலெக்சாண்டர், ஜுவா தஞ்கவேல், தயந்தி என பலர் வீரப்பன் குறித்து பேசுகின்றனர். 

 

”ஒரு கொலைக்காரனை வீரன் என்று சொல்ல முடியாது. ஆனால், வீரன்... சந்தன மரத்தை கடத்தவர் காட்டுக்குள் இருந்தாரு... ஆனால் வாங்கனவன் எங்கே? வீரப்பன் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன்? வீரப்பன் சாதாரணவன் இல்லை. அவன் ஒரு கூட்டத்துக்கு தலைவன்...” என நக்கீரன், சீமான், ரோகிணி என ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை கூறுகின்றனர். 

 


இறுதியாக ”எனது வாழ்க்கை வரலாறை நானே சொல்றேன். தப்பு என்னுடையதா? இல்லை அரசாங்கத்துடையதா..? நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..” என வீரப்பன் பேசுகிறார். இந்த ஆவணப்படத்தில் நக்கீரன் கோபாலிடம் வீரப்பன் பேசிய ஒரினல் டேப் வெளியிடப்பட உள்ளதால் முக்கிய தகவல்கள் வெளியாகலாம்.