Actor Suriya: நான் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்பும் அன்பான ரசிகர்களுக்கு நன்றி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

 

கங்குவா படப்பிடிப்பில் விபத்து:


 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் கங்குவா. 3 டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா 13 தோற்றங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

 

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் சென்னையின் பூந்தமல்லி அருகே இருக்கும் தனியார் ஸ்டுடியோஸில் நடைபெற்று வந்தது. அதில் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது, ரோப்பில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து சூர்யாவின் தோல் பட்டையில் விழுந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த சூர்யா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். விபத்து காரணமாக சூர்யாவின் கங்குவா படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. சூர்யாவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

சூர்யா நன்றி:


 

ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் அன்பிற்கு சூர்யா நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ நான் விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்த அன்பான ரசிகர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். உங்களின் அன்பால் எப்போதும் நன்றாக இருப்பேன்” என கூறியுள்ளார். சூர்யாவின் இந்த பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 





முன்னதாக இங்கு நடிகர் கமல்ஹாசனின் இந்தியன்2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததி 2 பேர் இறந்தனர். சிலர் காயமடைந்தனர். அதேபோல் நடிகர் ரஜினியின் ‛காலா' திரைப்பட சூட்டிங்கின்பேது மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார். அதன்பிறகு நடிகர் விஜயின் ‛பிகில்' படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்ததில் ஒரு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.