போடு... தலைவர் 170இல் இணைந்த ஃபஹத் பாசில்... ரஜினிக்கு வில்லனாக கலக்குவாரா?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தில் நடிகர் ஃபகத் பாசில் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சமீப காலமாகவே ரஜினி படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தது. மேலும் படிக்க
பட்டினி கிடந்து பேச்சு மூச்சின்றி போன ஸ்ரீதேவி.. மனைவி மரணம் பற்றி முதன்முறையாக பேசிய போனி கபூர்!
பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலான ஸ்ரீதேவி, தன் மகள் ஜான்வி சினிமாவில் அறிமுகம் ஆகும் நேரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு திடீரென உயிரிழந்தது இந்திய சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. துபாயில் திருமணம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பாத்டப்பில் மூழ்கி ஸ்ரீதேவி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மொத்த குடும்பத்தினரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர். மேலும் படிக்க
வில்லாதி வில்லன், நையாண்டி நாயகன், கலக்கல் ஹீரோ... தனித்துவமான நடிகர் சத்யராஜ் பிறந்தநாள்!
தன் நக்கல், நையாண்டி, வில்லத்தனம், ஹீரோயிசம் என ஒரு பேக்கேஜாக தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்து, தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சத்யராஜ் (Sathyaraj) இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த ஆண்டுடன் சத்யராஜ் தமிழ் சினிமாவுக்க்கு நடிக்க வந்து நாற்பதைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 45 ஆண்டுகளில் தெலுங்கு, மலையாளம் , தமிழ் என அனைத்து மொழிகளிலும் மொத்தம் 240க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார் . மேலும் படிக்க
விக்ரம், சூர்யா படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருந்த வி.ஏ.துரை உடல்நலக்குறைவால் மரணமடைந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகை பொறுத்தவரை தொடர்ச்சியாக பிரபலங்கள் மரணமடைந்து வருவது சக பிரபலங்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த இயக்குநர் ஜி மாரிமுத்து, பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தொடங்கி சிலர் அடுத்தடுத்து உயிரிழந்தது இன்றளவும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மேலும் படிக்க
கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. போகிற வழியில் “தலைவர் 170” குறித்து சொன்ன சூப்பர் அப்டேட்..!
தனது 170வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கொச்சி புறப்பட்டு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அந்த படம் குறித்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக ஜெயிலர் படம் வெளியாகியிருந்தது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியான நிலையில் சமீபத்தில் 50வது நாள் விழா கொண்டாடப்பட்டது. மேலும் படிக்க
ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.. யாருக்கு அதிகம், யாருக்கு கம்மி.. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் சம்பள விபரம்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் குறைந்த பட்சம் ரூ.12,000 முதல் அதிகபட்சம் ரூ.28,000 வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் சீசனுக்கு இருந்த வரவேற்புகளால் அடுத்தடுத்த சீசன்கள் எனத் தொடர்ந்தன. தொடர்ந்து பிக்பாஸின் ஆறு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது 7ஆவது சீசன் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் படிக்க