Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் குறைந்த பட்சம் ரூ.12,000 முதல் அதிகபட்சம் ரூ.28,000 வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் சீசனுக்கு இருந்த வரவேற்புகளால் அடுத்தடுத்த சீசன்கள் எனத் தொடர்ந்தன. தொடர்ந்து பிக்பாஸின் ஆறு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது 7ஆவது சீசன் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று முன் தினம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், நடிகர் கூல் சுரேஷ், நடிகை ரவீனா தாஹா, யூடியூப் பிரபலமான பூர்ணிமா ரவி, நடிகர் பிரதீப் ஆண்டனி, நிக்சன், விஷ்ணு விஜய், சீரியல் நடிகர் சரவண விக்ரம், அனன்யா ராவ், மாயா எஸ் கிருஷ்ணா, வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, பாடகர் யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லதுரை, விஜய் வர்மா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆகியுள்ளனர்.
வழக்கம் போல் முதல் நாளில் ஒருவரை ஒருவர் போட்டியாளர்கள் அறிமுகம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கான டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த சுவாரஸ்யத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ.12,000, அதிகபட்சமாக ரூ.28,000 என ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு எபிசோடுக்கும் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதில், வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் ஒரு எபிசோடுக்கு ரூ.13 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. மாய கிருஷ்ணன் ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரமும், ஐஷு ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரமும், யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரமும் சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும். நடிகை அக்ஷயா உதயகுமார் ஒரு எபிசோடுக்கு ரூ.15,000, அனன்யா ராவ் ஒரு எபிசோடுக்கு ரூ.12,000, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு எபிசோடுக்கு ரூ.18, 000 சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் விஜய் வர்மாவுக்கு ரூ.15,000, கூல் சுரேஷூக்கு ரூ.18,000, மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுக்கு ரூ.27,000, பிரதீப் ஆண்டனிக்கு ரூ.20,000, நடன கலைஞர் மணிச்சந்திராவுக்கு ரூ.18,000, விசித்ராவுக்கு ரூ.27,000, ரவீனாவுக்கு ரூ. 18,000, பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவுக்கு ரூ.20,000, பிரபல எழுத்தாளர் பாவா செல்லதுரைக்கு ரூ. 28, 000 சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: BiggBoss 7 Tamil: ”இது பிக்பாஸா?.. இல்ல.. வேற ஏதாவது ஸ்டண்ட்டா?” .. மணிசந்திரா கையை கடித்த ரவீனா..!