பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகிய பிறகு நடிகர் சிம்பு தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். அவர் தொகுத்து வழங்கத் தொடங்கிய பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான டி.ஆர்.பி. ரேட்டிங்கும் அதிகரித்துள்ளது. 


இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால், ரசிகர்களுக்கும் மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தணிக்கும் நோக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பை ஏற்படுத்துவதற்காக சதீஷ், சாண்டி ஆகியோர் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், தொடர்ந்து சண்டை சச்சரவுகள் குறைந்தபாடில்லை.


இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரையும் நடிகர் சிம்பு காட்டமாக பேசியுள்ளார். சிம்பு போட்டியாளர்கள் அனைவரையும் பார்த்து, “ இல்லை எனக்கு என்ன புரியவில்லை என்றால், உங்களுக்கு முதலில் கார் டாஸ்க் புரிந்ததா? டாஸ்க்கில் உள்ள ஏய் என்ற வார்த்தையை பிடித்துக்கெண்டு அவ்வளவு நேரம் பேசுகிறீர்கள். அந்த கான்வர்செஷேன் அங்கு தேவையா?” என்று கேட்கிறார்.

மேலும் படிக்க : Laila: 16 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் கன்னக்குழி நடிகை லைலா! இன்ஸ்டாவில் சூசக போஸ்ட்.!


மேலும், தாமரையைப் பார்த்து, “அக்கா நீங்கள் என்னவென்றால் அவர் சொன்னா இறங்கிக்குறேன்னு சொல்றீங்க. அவர் சொன்னா நான் இறங்கிப் போயிருன்னே சொல்றது. எல்லாரும் இறங்கிப்போயிட்டா அப்புறம் எதுக்கு கேம் விளையாட்றீங்க. நானும் வேணாம்.. வேணாம்னு எவ்வளோ நேரம்தான் பாக்குறது? எவ்ளோ கேள்வி கேக்கறாங்க தெரியுமா..? லெப்ட், ரைட் வெளுத்து வாங்குங்க.. சார் அப்படினு சொல்றாங்க..! இனிமே எல்லாம் டைரக்டா மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிட வேண்டியதுதான்..” என்கிறார்.


சிம்பு தொடக்கத்தில் போட்டியாளர்களிடம் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டார். ஆனாலும், பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் மாறி, மாறி சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையிலே, சிம்பு தற்போது மிகவும் காட்டமாக போட்டியாளர்களிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Rashmika Mandanna: என்னோட பிட்னஸ் ரகசியம் இதுதான்.. ராஷ்மிகா மந்தனா அள்ளித்தூவிய டிப்ஸ்!!

மேலும் படிக்க : Bigboss Ultimate : ஒரு பக்கம் பாலா - ரம்யா பாண்டியன் சண்டை.. மறுபக்கம் கண்டுகொள்ளாத சதீஷ்.. வைரல் வீடியோ.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண