Bigg Boss 7Tamil Promo: பிக்பாஸ் போட்டியில் 3வது நாளாக ரூ.12 லட்சத்துடன் காத்திருக்கும் பணப்பெட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் பூர்ணிமாவையும், அர்ச்சனாவுடன் மல்லுக்கட்டும் விசித்ராவின் புரோமோவும் வெளியாகியுள்ளது. 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், அடுத்தடுத்த லிமினேஷன்ஸ், பல்வேறு டாஸ்குகள் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. 

 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 95வது நாளை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில் 3 நாட்களாக காத்திருக்கும் பணப்பெட்டியும், அதன் மதிப்பு ரூ.12 லட்சமாக உயர்ந்திருப்பதும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், புரோமோவில் பணப்பெட்டியை எடுக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் பூர்ணிமா இருப்பதும் வெளியாகியுள்ளது. 

 





 

அடுத்த 2வது புரோமோவில் அர்ச்சனாவும், விசித்ராவும் மல்லுக்கட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ச்சனாவின் நடவடிக்கை எதுவும் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறும் விசித்ரா, ஆரம்பத்தில் அர்ச்சனா அமைதியாக இருந்ததாகவும், பிறகு நெகட்டிவாக பேசி சண்டையிழுத்ததாகவும், தற்போது பிக்பாஸ் சீசன் முடிய உள்ள நிலையில் மீண்டும் அமைதியாக இருப்பதாகவும் விசித்ரா குற்றம்சாட்டினார். 

 





அதற்கு பதிலளித்த அர்ச்சனா, பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சண்டை போடாமல் அமைதியாக இருக்க நினைப்பதாக கூறியுள்ளார். அப்போது எதிர்த்து பேசிய விசித்ரா, நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அதை பின்பற்றி இருக்கலாமே என்று கேள்வி எழுப்பியதுடன், ஏன் சண்டை போடனும் என்று கேட்டுள்ளார். 





 

மற்றொரு புரோமோவில், ”இத்தனை நாள் எங்கிட்ட பழகி இருக்காங்க. உள்ளுக்குள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளியே நல்லா பேசி இருக்காங்க” என்று விசித்ராவை பற்றி அர்ச்சனா மற்றும் மாயா பேசுவது வெளியாகியுள்ளது.