Bigg Boss Nixen:  விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் விஜய் வர்மா, பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணன், அர்ச்சனா, விசித்ரா, மணி சந்திரா, தினேஷ், விஷ்ணு விஜய் உள்ளிட்ட 8 பேர் மட்டுமே உள்ளே உள்ளனர்.

 

கடந்த வாரம் நடந்த இரட்டை எவிக்‌ஷனில் ரவீனா தாஹா, நிக்சன் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நிக்சன் உருக்கமாக இன்ஸ்டகிராம் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “இப்போ தான் எல்லாத்தையும் பாரத்தேன். எதிர்பாக்காத எல்லாத்தையும் எதிர்ல பாத்தது என்ன ஃபீல்.. எவ்வளவு சப்போர்ட்.. எவ்வளவு லவ். இவ்வளவு பேருக்கு என்ன பிடிச்சி இருக்குன்னு  உள்ள இருக்கற வரைக்கும் எனக்கு தெரியல. ஒரு வேளை தெரிஞ்சி இருந்தா இன்னும் எஃபோர்ட் போட்டுருப்பனோ...

 

அதல்லாம் யோசிக்கவே இல்ல.. ஐ எம் சாரி.. உள்ள கப் ஜெயிக்கனும்னு போகல, என்ன நல்லவனா காட்டிக்கனும்னு போகல, நாம் யாருன்னு நான் தெரிஞ்சிக்க போனேன். இந்த வீடு தந்த எக்ஸ்பீரியன்ஸ், ஆண்டவர் கொடுத்த லெசன்ஸ் மூலம் நல்லா டியூன் ஆகி இருக்கேன். என்கிட்ட இருக்கற நல்ல விஷயங்களை பாராட்டின எல்லாருக்கும் ரொம்ப நன்றி. என்கிட்ட இருந்த குறைய சுட்டிக்காட்டின, சுட்டி காட்டிக்கிட்டு இருக்க எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. 

 

நல்ல விஷயங்கள வளர்த்துக்கறேன், கெட்ட விஷயங்கள மாத்திக்கிறேன். அவ்வளவு ஸ்டார்க்கு நடுவுல தெரியாத எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும், இந்த வாழ்க்கையை கொடுத்த எல்லாருக்கும் நன்றின்னு வார்த்தையால சொன்னா பத்தாது. வேலையில காட்டுறேன்” எனக் கூறியுள்ளார்.  பிக்பாஸ் வீட்டில் இருந்த நிக்சன் டான்ஸ் மாரத்தான் டாஸ்கில் நடனமாடி டிரெண்டானார். தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடலுக்கு தனுஷ் போல் ஆடிய நிக்சன் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.  இதேபோல், விக்ரம் மற்றும் நிக்‌சன் வா ராஜா வா... லுங்கிய தான் ஏத்தி கட்டு.. அதாரு அதாரு” பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு பிக்பாஸ் வீடாரையும் ஆட வைத்தனர்.

 

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை என்டர்டெயின்மெண்டாக வைத்திருக்க, நிக்சன் மற்றும் பூர்ணிமா ஒன்றாக இணைந்து நடனமாடியதும் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. பூர்ணிமாவுடன் இணைந்து நடனமாடியதா நிக்சன் வெளியேற்றப்பட்டதாக கூறி விசித்ரா சர்ச்சையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.