Bigg Boss 7 Tamil: திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நடிகர் ஹரீஷ் கல்யாண் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 57வது நாளை கடந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் சண்டைகளுக்கும், வாக்குவாதங்களுக்கும், விவாதங்களுக்கும் பஞ்சமில்லை என்ற வகையில் சென்றுள்ளது. ஒருவாரம் காரசார விவாதம், ஒருவாரம் அமைதி என பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனில் இரண்டு பிக்பாஸ் வீடுகள், 5 வைல்டு கார்டு என்ட்ரி என மாறுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
கடந்த வார சீசனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற பிராவோ மற்றும் அக்ஷயா வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கெனவே வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா மற்றும் அனன்யா ரீ- என்ட்ரி கொடுத்துள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ஒவ்வொருவரின் கேரக்டரை குறிப்பிட்டு அவர்களின் முகத்திரையை கிழிப்பதாக விஜய் வர்மா அறிவித்தார். அனன்யா ஒவ்வொரு போட்டியாளர்களின் குணத்திற்கு ஏற்ப பட்டம் வழங்கினார்.
பிக்பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா ஒரு கூட்டணியாகவும், விசித்ரா மற்றும் அர்ச்சனா ஒரு கூட்டணியாகவும் இருந்து நிகழ்ச்சியை கொண்டு சென்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்க நடிகர் ஹரீஷ் கல்யாண் வருகை தந்துள்ளார். மேலதாளத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஹரீஷ் கல்யாண் போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாடினார்.
பின்னர், போட்டியாளர்களிடம் பேசிய ஹரீஷ் கல்யாண் ”இதுவரை வந்த சீசனிலேயே இதுதான் கடினமான சீசன், நீங்கள் இதுவரை வந்ததே பெரிய விஷயம்” என்றார். மேலும், இரவு பிக்பாஸ் வீட்டிலேயே தங்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கேட்டார். ஹரீஷ் கல்யான் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியானதால் போட்டியில் மேலும் சில திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்க்கிங் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்துள்ளார். இவருடன் இணைந்து இந்துஜா, எம்.எஸ். பாஸ்கர், ராம உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அணமையில் வெளியான படத்தின் புரோமோ வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றன. படம் டிசம்பரில் ரிலீசாக உள்ள நிலையில் அண்மையில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றது. நடிகராக இருந்தாலும் 2017-ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் ஹரீஷ் கல்யாண் போட்டியாளரக பங்கேற்றார். பிக்பாஸ் போட்டியின் பாதியில் பங்கேற்றிருந்தாலும் இரண்டாவது ரன்னர்- அப் ஆக வந்த ஹரீஷ் கல்யாண் பிரபலமானார். அதன்பிறகே முக்கிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தன.
மேலும் படிக்க: Paruthiveeran: ஞானவேல்ராஜா மீது வலுக்கும் எதிர்ப்பு.. அமீருக்கு நன்றி தெரிவித்த கார்த்தி, சூர்யா.. குழம்பும் ரசிகர்கள்..