Bigg Boss 5 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்‌ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.


இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5-ன் இறுதி எபிசோட் நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், அதற்கான சூட்டிங் இன்று தொடங்கி இருக்கிறது. ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக நிரூப் வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. 


மேலும் படிக்க: Virat Kohli Letter: “ஒரு கேப்டனாக என்னைக் கண்டறிந்த தோனிக்கு நன்றி” - பதவி விலகிய கோலி நெகிழ்ச்சி






இறுதி எபிசோடின் படப்பிடிப்பு இன்று காலை 9 மணி தொடங்கி இருப்பதாகவும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இறுதிச்சுற்று போட்டியாளர்களில் நிரூப்பை நடனக்குழு சென்று வெளியே அழைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு ஐந்தாவது இடம் கிடைத்திருக்கிறது. அதனை அடுத்து அமீருக்கு நான்காம் இடமும், பாவனிக்கு மூன்றாம் இடமும் கிடைத்திருப்பதாக தெரிகிறது. கடைசி இரண்டு இடங்களுக்கான போட்டியில் ராஜூவும், ப்ரியங்காவும் உள்ளதாக தெரிகிறது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஆண் போட்டியாளரும், ஒரு பெண் போட்டியாளரும் கடைசி இரண்டு இடங்களுக்காக போட்டியிடுகின்றனர். இதில், ப்ரியங்காவுக்கு இரண்டாம் இடமும், ராஜூ டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், 50 லட்சம் ரூபாய் பரிசும், டைட்டில் பட்டத்தையும் ராஜூவே வென்றிருப்பதாக தெரிகிறது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்