பிக்பாஸ் வீட்டில் கமல்ஹாசன் கலந்துகொள்ளும் காரசாரமான வார இறுதி எபிசோடுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்றைய முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது.


இன்றைக்கு ஓபன் நாமினேஷன் தான் இருக்கும் என நேற்றே கண்டெஸ்டண்ட்கள் விவாதித்த நிலையில், அதன்படி இன்று ஓபன் நாமினேஷன் கார்டன் ஏரியாவில் நடக்கிறது. இதில் நாமினேஷன் தொடங்குவதற்கு முன் நிக்சனும் விக்ரமும் தங்களுக்குள் ரகசியமாக விவாதித்துக் கொள்ள, அர்ச்சனா அனைவரும் எதிர்பார்த்ததுபடி நிக்சனை நாமினேட் செய்கிறார்.


அதேபோல் சென்ற வார பேகேஜ்கள் அப்படியே தொடர விஷ்ணு பூர்ணிமாவினை உங்கள் டிக்‌ஷனரியில் ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஒன்றே இல்லை என சொல்லி வாக்களிக்கிறார். தொடர்ந்து விசித்ரா தினேஷையும், கூல் சுரேஷ் விசித்ராவையும் நாமினேட் செய்கின்றனர்.


 



மாயா - பூர்ணிமா அணி ‘புல்லி கேங்’ எனப் பெயர் வாங்கி கடந்த சில வாரங்களுக்கு முன் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து, தற்போது அண்டர்பிளே செய்யும் நிலையில், அதேபோல் விஷ்ணு - தினேஷ் - அர்ச்சனா-  கூல் சுரேஷ் கொண்ட புதிய அணியாக ‘டீம் பி’ உருவாகியுள்ளதாக பிக்பாஸ் ரசிகர்கள் சென்ற வாரம் கவலை தெரிவித்து வந்தனர்.


நடிகர் கமல்ஹாசனும் அதற்கேற்றார்போல் இந்தக் குழுவை அதிகமாகக் கண்டித்த நிலையில், மற்றொருபுறம் இவர்களது ஆதரவாளர்கள் கமல்ஹாசன் ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதாக இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.


அர்ச்சனா, விஷ்ணு இருவரும் நேற்றைய எபிசோடில் அதிகம் ரோஸ்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் இருவரும் தங்கள் கேம் பிளானை மாற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா,  சரவண விக்ரம், விஜே அர்ச்சனா, தினேஷ், ரவீணா, மணி சந்திரா,  மாயா கிருஷ்ணன், கூல் சுரேஷ்,  பூர்ணிமா,  நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.
 
இந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் வரும் வாரங்களில் இரண்டு இரண்டு பேராக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆட்கள் வெளியேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 5 வாரங்களே பிக்பாஸில் எஞ்சியுள்ள நிலையில் பரபரப்பின் உச்சத்தை பிக்பாஸ் விளையாட்டு எட்டியுள்ளது.


இந்நிலையில் இந்த வார இறுதி எபிசோடுகளில் போட்டியாளர்களை வழக்கத்துக்கு மீறி கமல்ஹாசன் கண்டித்துள்ள நிலையில் அனைவரது ஆட்டத்தின் போக்கும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்ற வாரம் கண்டெண்ட் பஞ்சம் இல்லாமல் சண்டைகள் நிறைந்து காணப்பட்ட நிலையில், இந்த வாரம் அதற்கு மாறாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: Jyothika Surya : பெரிய இயக்குநர்கள் இந்த வேலையை பண்றாங்க.. பரபரப்பு பேட்டியளித்த ஜோதிகா..


Server Sundaram : 59 ஆண்டுகளை நிறைவு செய்த 'சர்வர் சுந்தரம்' உருவான கதை தெரியுமா? பாலச்சந்தர் - நாகேஷ் நட்பின் அடையாளம்...