நேற்றைய பிக்பாஸ் எபிசோட் பற்றி தனியார் சேனலில் விமர்சனம் செய்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். கடந்த வாரம் தான் வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், வனிதா நேற்றைய எபிசோட் பற்றி பேசியுள்ளது:


கமல் அழகா பேசுனாரு..


"பல வாரங்களுக்குப் பிறகு இதுதான் பெர்ஃப்க்ட் வீக் எண்ட். நியாயமா இருக்கணும். யார் தப்பு செஞ்சாலும் கேளுங்க.. அவங்களுக்கு அறிவுரை சொல்லுங்க.. அதாவது நிக்சன் கிட்ட கமல் சார் சொன்னாரு என்ன விட உனக்கு ஜாஸ்தி கோபம் வந்து இருக்கணும்னு. நீங்க யூஸ் பண்ண வார்த்தைகள் தான் தப்பா தரமில்லாம இருந்துச்சே தவிர, உங்க கோபம் சரிங்கறத ரொம்ப அழகா சொல்லி இருந்தாரு, ஏன்னா ஒருவரை தூண்டும் அர்ச்சனாவின் அந்த செயல் சரியில்ல. 


அர்ச்சனா அதை உள்நோக்கத்துடன் வன்மத்துடன், இந்தப் பையன் அதுல விழுவான் எனத் தெரிஞ்சு தான்  செய்தார். அந்தப் பையன் இல்ல அர்ச்சனாவ பார்த்து விக்ரமுக்கே கோபம் வருது பாத்துக்கோங்க.


பூர்ணிமா வாயில் பிளாஸ்டர்




விஷ்ணு விசித்ரா போயிடுவார்னு சொல்லிட்டே இருந்ததால தான் கமல் இப்படி விசித்ராவை எலிமினேஷன் இல்லாதபோதும் சேவ்ட்னு சொன்னார். இனி விஷ்ணுவுக்கு அள்ளு வரும். குணாதிசய மாற்றம்லாம் நான் அந்த வீட்டில் இருக்கும்போது நான் கவனிச்சு இருக்கேன். பிக்பாஸ் வீட்டில் நாமினேஷனில் இருக்கும்போது ஒரு மாதிரி. கைத்தட்டல் வரும்போது ஒரு மாதிரி என போட்டியாளர்கள் பிஹேவ் செய்வாங்க. அப்படியே மாறிடுவாங்க.


அதை தான் இனிமே நீங்க உன்னிப்பா கவனிக்கணும். கூல் சுரேஷ் மாறுவார். விஷ்ணுக்கு முதல் வாரத்துல இருந்தே தாவறது தான் வேலை. அவர் மாறுவார். நான் அந்த வீட்டுக்குள் போயிருந்தால், எனக்கு ஏதாவது டாஸ்க் கொடுத்து இருந்தா, நான் முதலில் பூர்ணிமாகிட்ட போய் அவங்க வாயில் பிளாஸ்டர ஒட்டுவேன். நீ வாயை மூடினாலே நல்லா இருப்பமா வாழ்க்கைல. அந்தப் பொண்ணோட நோக்கம் தப்பா இல்ல. ஆனா தேவையில்லாம பேசறாங்க. அவங்களே பேசி, அவங்களே ஒரு முடிவுக்கு வந்து, அவங்களே பாயிண்ட் தராங்க. இதுக்கு எதிரியே தேவையில்ல. தன் வாயே தனக்கு எதிரி..


அர்ச்சனா கையும் களவுமா மாட்டியாச்சு..




கமல் சார் அங்க இல்லாத பெண்கள பத்தி பேசாதீங்கனு சொன்னாரு. அர்ச்சனாங்கற கேரக்டர கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. அந்த வீட்ல அவங்க பண்ண எல்லா நான்சென்ஸ்க்கும் சேத்து வச்சு மொத்தமா மாட்டிக்கிட்டா. இதுக்கு மேல எந்த பிஆர் உம் அர்ச்சனாவ காப்பாத்த முடியாது.


வினுஷாவுக்கு மக்கள் முன் நிக்சன மன்னிப்பு கேட்க வச்சிட்டாரு. இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?அனன்யா ஒரு பாயிண்ட் சொன்னாங்க. பெண்கள் மட்டும் எனக்கு இப்படி ஒரு பையன் வேண்டும், சிக்ஸ்பேக் வேண்டும், மேன்லியா வேண்டும்னு லாம் சொல்றாங்கனு. அது ஒரு வாக்குவாதமா ஆச்சு. ஒரு பையன் அந்தப் பொண்ணு இல்லாத இடத்துல கப்சா விடறான். எல்லாருமே செய்யக்கூடியது தான் அது. நான் அது சரினு சொல்லல. ஆனா அத உலகமகா குத்தமா ஆக்கக்கூடாது. நீ தப்புனா சாரினு சொல்லு. 


வினுஷா அழகு




வினுஷாவும் புரிஞ்சக்கணும். வினுஷா அழகு. அவங்களே அத பெருசா பண்றாங்க. நீ யார்டா சொல்றதுக்குனு கேக்கணும்.  திருந்த மாட்டேன்னு சொன்னவன் வெளியே போனான். திருத்திக்கறேன்னு சொன்னவனுக்கு மன்னிப்பு தரணும்.


சரியான பாயிண்டுகள் உடன் நல்ல எபிசோட். நிக்சன் அடுத்த ஸ்டேஜூக்கு போறதுக்கான சப்போர்ட், அறிவுரை ரெண்டையும் கமல் சார் தந்து இருக்காரு. அவன் கையில் கட்ஸ் இருக்கு. நேர்மை இருக்கு. அவன் பாஷைல தான் பிரச்னை இருக்கு. அத சரியா கொண்டு போனானா கண்டிப்பா ஃபைனல்ஸ் ல இருப்பேன். ரன்னர் அல்லது வின்னர்ல இருக்கக்கூடிய தகுதி நிக்சனுக்கு3 இருக்கு. நாளைல இருந்து அர்ச்சனா அழுவா. பூர்ணிமா குழம்பிப் போய் இருப்பா” என வனிதா பேசியுள்ளார்.