Bigg Boss 7 Tamil Vikram: மாயாவிடம் மீண்டும் பேசும் சரவண விக்ரம் தவறான பாதைக்கு செல்வதாக அவரது தங்கை காட்டமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லும் ரேஸில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பைனலுக்கு நேரடியாக சென்று விஷ்ணு விஜய் உள்ளனர்.
ஓரிரு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள சரவண விக்ரம், மாயாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரிடம் சரண்டராகியுள்ளார். மேலும், சரவண விக்ரமின் தங்கை பேசியது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று மாயா கூறியபோது, ” நாம் பழகியது நமக்கு தானே தெரியும்” என சரவண விக்ரம் பதில் கூறியுள்ளார்.
இது சரவண விக்ரமின் குடும்பத்தாரை எரிச்சலடைய செய்துள்ளது. இந்த நிலையில், மாயாவிடம் மீண்டும் சரவண விக்ரம் பேசியது குறித்து அவரது தங்கை சூர்யா இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார். அதில், “உங்களுடைய குடும்பத்தை விட நீங்கள் வேறொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஃப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சரவண விக்ரமின் குடும்பத்தார், அவர் சரியான வழியில் இல்லை என்றும், யாரையும் நம்ப வேண்டாம் என்றும் கூறினர். குறிப்பாக மாயாவை பங்கமாக பேசிய சரவண விக்ரமினி தங்கை சூர்யா, மாயாவிடம் இருந்து தனது அண்ணன் ஒதுங்கி இருக்க வேண்டும் எனக் கூறிச் சென்றார். அடுத்த வாரத்தில் சரவண விக்ரம் வெளியேறினார். அப்போது, மாயா சரவண விக்ரமிடம் சரியாக பேசாமல் அவரை புறக்கணித்தது பிக்பாஸில் சர்ச்சையானது. இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சரவண விக்ரம் மீண்டும் மாயா பக்கம் சென்றுள்ளார்.
மேலும் படிக்க: Ayalaan: இந்தியாவிலேயே சிறந்த வி.எஃப்.எக்ஸ் காட்சிகள்.. பாராட்டுக்களைப் பெறும் சிவகார்த்திகேயனின் "அயலான்"!