விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் இணையும் திரைப்படம் தக் லைஃப். அதில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லஷ்மி என பெரும் பட்டாளமே இணைந்துள்ளனர். இதேபோல், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படத்திலும் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இதற்கிடையே ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் KH233 திரைப்படத்தில் கம்லஹாசன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியத் திரைப்படமான உருவாகி வரும் கல்கி 2898 படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் KH237 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் KH237 படத்தில் நடிப்பதை பெருமையாக நினைப்பதாகவும், இருவரையும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு அழைப்பதில் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர்களாக பிரபலமான அன்பறிவ்( அன்புமணி, அறிவுமணி) என்ற இரட்டை சகோதரர்கள், கேஜிஎஃப் படத்தில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து தேசிய விருதை பெற்றனர். கேஜிஎஃப் மட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட பங்களில் சண்டை பயிற்சியாளர்களாக இருந்து அசத்தியுள்ளனர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க: Thug Life: கமல்ஹாசனுடன் கைகோர்த்த “பூங்குழலி”.. தக் லைஃப் படத்தில் இணைந்த ஐஸ்வர்யா லஷ்மி!