Bigg Boss 7 Tamil Vinusha: நிக்சன் தன்னை உருவக்கேலி செய்ததை ஜஸ்ட் ஜோக் என்ற பூர்ணிமாவை கேள்வியால் வெளுத்து வாங்கியுள்ளார் வினுஷா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லும் ரேஸில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பைனலுக்கு நேரடியாக சென்று விஷ்ணு விஜய் ஆகியோர் உள்ளனர்.
ஓரிரு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தாளியாக வந்த வினுஷா, தன்னை உருக்கேலி செய்த நிக்சனையும், அதை வைத்து கேம் பிளே ஸ்ட்ரேட்டஜி செய்த அர்ச்சனாவையும், நிக்சனை பேசியதை காமெடி என்ற பூர்ணிமாவை கேள்வி கேட்டு வறுத்தெடுத்துள்ளார்.
பூர்ணிமாவிடம் பேசிய வினுஷா, ” என் உடலமைப்பு குறித்து நிக்சன் பேசியதை ஜெஸ்ட் ஜோக் என்று நீங்கள் சொன்னீர்கள். அது எனக்கு ஜோக் இல்லை” என்றார். அதற்கு பதிலளித்து சமாளிக்க முயன்ற பூர்ணிமா, “ எந்த இடத்தில் ஜோக் என்றேன்” எனக் கேட்டார். மேலும், அன்று மேக்கப் ரூமில் நிக்சன் விஷியத்தை மட்டுமில்லாமல் நிறைய விஷயங்களை பேசினோம். நான் ஏன் ஒருவரின் உருவக்கேலியை சப்போர்ட் செய்யப் போகிறேன்” என்று பதிலளிக்க முயன்றார். எனினும், பூர்ணிமாவின் பதிலை வினுஷா ஏற்கவில்லை.
முன்னதாக வினுஷாவிடம் பேசிய நிக்சன், தான் பேசியது வெளியே தவறாக பரப்பப்பட்டுள்ளதாகவும், அதனால் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். நிக்சனின் இந்தப் பேச்சால் மீண்டும் கடுப்பான வினுஷா, “வெளியில் தப்பாக காட்டப்பட்டுள்ளதனால் நீ மன்னிப்பு கேட்கிறாய் என்றால் அந்த மன்னிப்பை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீ பேசியது தவறு என்று உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே ஏற்று கொள்வேன் “ என்றார்.
பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்ததில் இருந்து தொடர்ந்து சம்பவம் செய்து கொண்டிருக்கும் வினுஷா, அர்ச்சனாவிடம் பேசினார். அப்போது ”உங்களை பற்றி பேசினால் நிக்சனுக்கு கோபம் வரும் என்று பேசினேன்” என அர்ச்சனா கூறினார். அதைக் கேட்ட வினுஷா, “நான் தானே பாதிக்கப்பட்டது, நீங்க உங்க ஆதாயத்துக்கு யூஸ் பண்ணிக்கிட்டீங்க” என்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் தன்னை கேலி செய்து அதில் ஆதாயம் பார்க்க முயன்ற ஒவ்வொருத்தரையும் டார்கெட் செய்து வினுஷா வெளுத்து வாங்கி வருகிறார்.
மேலும் படிக்க: Bigg Boss Season 7: பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்களின் ஆட்டம் எப்படி இருக்கு? யாருதான் டைட்டில் வின்னர்!