தரமில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அதை விசாரிக்க வேண்டும் என கமல்ஹாசன் டெரராக கூறும் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 70ஆவது நாளை நெருங்கியுள்ளது. இந்த சீசனில் வழக்கத்திற்கு மாற்றாக பிக்பாஸ், ஸ்மால் பாக்ஸ் வீடுகள், 5 வைல்டு கார்டு என்ட்ரி என பரபரப்பாக காணப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் பங்கேற்ற போட்டியாளர்களிடமும் வாக்குவாதம், சர்ச்சைகள், விவாதங்கள், அழுகை, கேலி, கிண்டல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஞ்சாயத்தாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ”ஊரே வெள்ளத்தில் மூழ்கி தவிழ்த்து கொண்டிருக்கும் விசயம் உள்ளே இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் விளையாடி கொண்டிருக்கிறார்கள். வெளியே தண்ணீர் வடிந்ததும் தரை தெரியும். இவர்கள் மூழ்கி இருக்கும் விளையாட்டு முடிந்தால் தரம் தெரியாது. தரம் இல்லாமல் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தரம் குறித்து விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனக் கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அர்ச்சனாவை நிக்சன் மூச்சிய பாரு...நாயே என்று அநாகரீகமாக பேசியதுடன், சொருகிடுவேன் என்ற வார்த்தையையும் விட்டார். இதனால் சமூக வலைதளத்தில் நிக்சனுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த. பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது போல் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பலரும் கருத்து கூறினர். நிக்சனை போல் பூர்ணிமாவை விஷ்ணு அநாகரீகமாக விமர்சித்து பேசியதை விஜய் வர்மா போட்டுடைத்தார். இதனால் இன்றைய எபிசோடில் விஜய் அர்ச்சனாவிடம் அநாகரீகமாக பேசியது குறித்து கமல்ஹாசன் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருகட்டத்தில் இவர்களின் சண்டை பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்போது ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேவலமாக பேசிக் கொள்வதால் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை எட்டியுள்ளது.
இதற்கிடையே மிக்ஜாம் புயல் பாதிப்பால் மக்கள் வாக்களிக்க முடியாது என்ற காரணத்தால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. எவிக்ஷனில் நிக்சன் மற்றும் விசித்ரா இருந்த நிலையில், அவர்கள் இருவரும் பாதுகாக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: தரம் இல்லாமல் விளையாடறாங்க.. கமல்ஹாசனையே ட்ரிகர் செய்த போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று!