Star Movie: கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஸ்டார் படம் தொடர்பான ஃபோட்டோ ஆல்பத்தை வீடியோவாக வெளியிட்ட படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ படத்தை எடுத்த இயக்குநர் இலன் இயக்கும் ஸ்டார் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். நடிகராக விரும்பும் இளைஞனின் வாழ்க்கையே படத்தின் கதை என்பது இன்று வெளியான போட்டோ ஆல்பம் வீடியோவில் தெரிய வந்துள்ளது.

 


 

2011ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க தொடங்கிய கவின், தாயுமானவன் மற்றும் சரவணன் மீனாட்சி சீரியல்களில் நடித்து பிரபலமாக தொடங்கினார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதி நடித்து பீட்சா, இன்று நேற்று நாளை படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். அப்போது பெரிதாக பேசவில்லை என்றாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கு என தனி ஃபேன் பேஸை கவின் பெற்றார். 

 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கவின் லிப்ட் படத்தில் நடித்தார். அடுத்ததாக கவின் நடித்த டாடா படம் அவருடயே கெரியரை மாற்றும் விதமாக அமைந்துள்ளது. மனைவியை பிரிந்து தனி ஆளாக ஒரு குழந்தையை வளர்க்கும் கவினின் கேரக்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. டாடா படத்திற்கு பிறகு கவினிற்கு அடுத்தத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் கவின் நடித்திருக்கும் படம் ஸ்டார். 

 

  இயக்குநர் இலன் இயக்கி இருக்கும் ஸ்டார் படத்தில் கவின் ஒரு நடிகனாக ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். கவினை அவரது அப்பாவாக நடித்துள்ள லால் ஒவ்வொருமுறை அழைத்து சென்று புகைப்படம் எடுக்கிறார். ஒருவழியாக கவின் நடித்த திரைப்படம் வெளியாகிறது போன்ற காட்சிகள் ஃபோட்டோ ஆல்பம் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதனால் ஸ்டார் படம் திரையில் நடிகனாக இருக்கும் நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை கூறலாம் என கணிக்கப்படுகிறது. 


 


இந்தப் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது.