Jovika Vijayakumar:  விஜய் டிவியில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பங்கேற்றார். பிக்பாஸ் போட்டி தொடங்கிய முதல் நாளே, ஜோவிகாவின் பெயர் சர்ச்சைக்குள்ளாகியது. ஜோவிகா தனக்கு 19 வயது எனக் கூறி நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைத்த நிலையில், அவர் உண்மையாகவே 18 வயதை பூர்த்தி செய்துவிட்டாரா என விமர்சனங்கள் எழுந்தன. விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே அடிப்படைக் கல்வி தொடர்பாக விவாதம் ஏற்பட்டது. தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் படிக்கவில்லை என்று ஜோவிகா கூறியதை நெட்டிசன்ஸ் டிரோல் செய்து வந்தனர். 

 


விசித்ராவுடன் குரலை உயர்த்திப் பேசிய ஜோவிகா இணையத்திலும் டிரெண்டானார். அடுத்ததாக பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனாவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜோவிகாவின் 19 வயதை காரணம் காட்டி அர்ச்சனா பேசியதற்கு, போடி என அவர் திட்டியது டிரெண்டானது. இதேபோல், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருடன் ஜோவிகா பேசியதை வனிதா விஜயகுமாருடன் ஒப்பிட்டு டிரோல் செய்யப்பட்டது. 

 

இச்சூழலில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜோவிகா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், 60 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜோவிகாவின் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் 60 நாட்களுக்கு மேல் ஜோவிகா இருந்ததால் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெற்றிருப்பார் என்று கூறப்படுகிறது. 

 

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது ஜோவிகா வாரத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் என சம்பளம் பேசி சென்றதாகவும், இத்தனை வாரங்கள் இருந்ததால் அவருக்கு ரூ.10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. 

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜோவிகா, முன்னதாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ”எனது அன்பான ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் மட்டுமல்லாமல் சிறந்த வீரர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சியின்போது பேசிய எனது உரிமைகள் மற்றும் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எதற்கும் வருந்தப்பட மாட்டேன். எனது செயல்களால் உங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பேன் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.