மிக்ஜாம் புயல் காரணமாக ஒட்டுமொத்தம் சென்னையும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பெரும்பாலான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. தாம்பரம்த்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது. மிகப்பெரிய வாகனங்கள் எல்லாம் தண்ணீரில் மிதந்து வருகின்றது. இந்நிலையில், நடிகர் சங்கத் செயலாளர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல் அந்த டிவிட்டர் பதிவில் சென்னை மேயர் பிரியா ராஜனை டேக் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ” அன்புள்ள பிரியா ராஜன் (சென்னை மேயர்) மற்றும் & பெரு சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அனைத்து அதிகாரிகளும், உங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், குறிப்பாக வடிகால் நீர் உங்கள் வீடுகளுக்குள் நுழையாது மற்றும் மிக முக்கியமாக, உங்களுக்கு நிபந்தனையற்ற உணவு மற்றும் மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமக்கள் ஆகிய சாதாரண வாக்களர்களாகிய நாங்கள் அதே நிலையில் இல்லை.


மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா? 2015 ஆம் ஆண்டில், துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது.  இந்த நேரத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்வோம்.  ஆனால் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியே வந்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும்.  நான் அண்ணாநகரில் இருக்கின்றேன். எனது வீட்டின் உள்ளே ஒரு அடிக்கு தண்ணீர் உள்ளது. எனது வீட்டில் இவ்வாறு இருக்கின்றது என்றால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளின் நிலமையை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கின்றது. மழைநீர் வடிகாலுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் எங்கே? எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து மக்களுக்கு உதவினால் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கும். மக்கள் குழந்தைகளுடனும் பெரியவர்களுடனும் இருக்கிறார்கள்.






இந்த மழைக்கு சென்னை முழுவதும் மழை நீர் தேங்குவது மிகவும் கேவலமான விஷயமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணங்கள் கிடைக்க மாநகராட்சி ஊழியர்கள் பணிசெய்ய வேண்டுகிறேன். இது ஒரு முக்கியமான பதிவு. நாங்கள் வரி கட்டுகின்றோம், எதற்காக வரி கட்டுகின்றோம் என கேள்வி கேடக வைத்து விடாதீர்கள். தொகுதியில் உள்ள மக்கள் உதவுவார்கள் என எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.