Bigg Boss 7Tamil Promo: டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான எலிமினேஷனால் நிக்சனுக்கு எதிராக தினேஷுடன், அவரது டீமும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

 

தமிழில் ஒளிபரப்பாகி மக்களை அதிகமாக ஈர்த்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் தான். கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7வது சீசனை தொட்டியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் பிக்பாஸின் 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 

 

இந்த சீசனுக்கு அதிக வரவேற்பு இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி 86வது நாளை கடந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் மாயா,  பூர்ணிமா, மணி, ரவீனா, விசித்ரா, விஷ்ணு, அர்ச்சனா, விஜய், தினேஷ் மற்றும் நிக்‌சன் என 10 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் குதித்துவிட்டனர். 

 

இதில் விஜய் வர்மாவும் அர்ச்சனாவும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் விளையாடக்கூடாது என போட்டியாளர்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்ததால் இவர்கள் இருவரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது. 

இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதல் அதாவது நேற்று முதல்  (டிசம்பர் 26) டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நேற்று நடந்த போட்டி முடிவின் அடிப்படையில் விஷ்ணு மூன்று புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.​ இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 


​தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஒரு டீமாகவும், மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சன் மற்ரும் விஜய் வர்மா ஒரு டீமாகவும் உள்ளனர். அதில், நிக்சன் முழுவதுமாக மாயா டீமுக்கு போனதாக விஷ்ணு பேசுகிறார். அப்போது குறுக்கிட்ட ரவீனா, முந்தைய சீசன்களில் இங்கிருந்து யாராவது எவிக்ட் ஆகி போனால் உண்மையா ஃபீல் பண்ணுவாங்க. ஆனால், இந்த சீசனில் யாராவது வெளியே போனால் அப்பாடா ஒருவர் வெளியே போயிட்டாருக்கு என்ஜாய் பண்றாங்க” ஆதங்கத்துடன் கூறுகிறார். 



அதே​ நேரம் மாயா, பூர்ணிமா, நிக்சன் விசித்ரா மற்றும் விஜய் டீம் ஜாலியாக பேசி சிரித்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், போட்டியாளர்கள் இரண்டு டீமாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். யார் யாரை வெளியேற்றுவது என்ற குழப்பத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் உள்ளனர். 


மேலும் படிக்க: Bigg Boss Promo: விஷ்ணுவை எலிமினேட் செய்த ரவீனா; மணிக்காக இதைச் செய்தாரா? பரபரப்பைக் கூட்டும் ப்ரோமோ


Paiyaa Re-Release: ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரீ-ரிலீஸூக்கு தயாராகும் பையா