தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி தற்போது 85 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ளனர். அதாவது மாயா, பூர்ணிமா, மணி, ரவீனா, விசித்ரா, விஷ்ணு, அர்ச்சனா, விஜய், தினேஷ் மற்றும் நிக்‌ஷன் என 10 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் குதித்துவிட்டனர். இதில் விஜய் வர்மாவும் அர்ச்சனாவும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் விளையாடக்கூடாது என போட்டியாளர்கள் வாக்கு செலுத்தி தேர்வு செய்ததால் இவர்கள் இருவரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது. 


இந்நிலையில், இந்த வாரத்தின் தொடக்கம் முதல் அதாவது நேற்று முதல்  (டிசம்பர் 26) டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் நேற்று நடந்த போட்டி முடிவின் அடிப்படையில் விஷ்ணு மூன்று புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல் மணி 2 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 27ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில், பரமபதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டாஸ்க்கில் போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் ரவீனாவுக்கு வரும் கார்டில், ஒருவரை இந்த பரமபத விளையாட்டில் இருந்து எலிமினேட் செய்யும் வாய்ப்பு கிடைக்கின்றது. அதனைப் பார்த்த ரவீனா, நேற்று என்னை யாரெல்லாம் எலிமினேட் செய்தீர்கள் எனக் கேட்கின்றார். அதற்கு மாயாவும் பூர்ணிமாவும் “ நாங்கதான் டீச்சர்” என்பதைப் போல் கையைத் தூக்குகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவரை ரவீனா எலிமினேட் செய்வார் என கருதிக்கொண்டு இருந்த வேளையில், ரவீனா, நேற்றைய போட்டியில் மூன்று புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ள விஷ்ணுவை எலிமினேட் செய்து விஷ்ணுவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத விஷ்ணு இன்றைய டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் விளையாட முடியாமல் வெளியேறுகின்றார். 



அதேபோல் பூர்ணிமா தனக்கு வந்த கார்டின் மூலம் நிக்‌ஷனை ஸ்வாப் செய்கின்றார். விசித்ரா தனக்கு வந்த கார்டின் மூலம் மாயாவை பின்னுக்குத் தள்ளுவதைப் போலும் ப்ரோமோவில் காண்பிக்கப்படுகின்றது.  ரவீனா விஷ்ணுவை எலிமினேட் செய்ததற்கு முக்கிய காரணமே மணி டிக்கெட் டூ ஃபினாலேவில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகத்தான் செய்துள்ளார் என பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகின்றது. இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடக்கும் என்பதால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கின்றது.